ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

மற்றொரு ஊரடங்கை தாங்கும் நிலையில் மக்கள் இல்லை – மு.க.ஸ்டாலின்

 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் அசாதாரன சூழ்நிலை நிலவி வரும் நிலையில், கடந்த வாரத்தில் இருந்து புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த ஊரடங்கு தொடரும் என்றும், ஞாயிற்று கிழமைக்களில் முழு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி இன்று (ஏப்-25) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி கணப்படுகிறன்றன. இந்த உத்தரவு நாளை காலை வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் மே 2ந் தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், மே 2-ஆம் தேதிக்குப் பிறகு இன்னொரு ஊரடங்கைத் தாங்கும் நிலையில் தமிழக மக்களும் இல்லை, அவர்களது வாழ்வாதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.


இது குறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில்,

தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. முதல் கொரோனா அலையில் கிடைத்த அனுபவங்களை வைத்து தொலைநோக்கு திட்டத்தை கவனிக்க அரசு தவறிவிட்டது. தமிழ்நாட்டில் சுகாதார உட்கட்டமைப்பு நமக்கு வரப்பிரசாதம் என்றாலும், அதற்கு ஏற்ற திட்டமிடல் இருந்தால் மட்டுமே மக்களை பாதுகாக்க முடியும். ஆன்ஸிஜன் தடுப்பூசி ஆகியவற்றின் கையிருப்பை அதிகரிப்பது மருத்துவமனைகளில், படுக்கை வசதிகள், தயார் நிலையில், வெண்டிலேட்டர்கள், மருந்துகள், தற்காலிக மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைளில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும்.

மே 2 ஆம் தேதிக்குப் பின் இன்னொரு ஊரடங்கைத் தாங்கும் நிலையில் தமிழக மக்களும் இல்லை, அவர்களது வாழ்வாதாரமும் இல்லை. எனவே, இடைக்கால அரசு இருக்கும் ஒரு வாரத்தில், கொரோனா பரவலைத் தடுத்திட அதிகாரிகள் அனைவரும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-covid-19-lockdown-stalin-say-about-again-lockdown-295573/