Serum Institute’s Rs 600/dose for Covishield : இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி மே 1ம் தேதி முதல் வழங்கப்பட இருக்கின்ற நிலையில், ஆக்ஸ்போர்ட் மற்றும் ஆஸ்ட்ரெனெகா இணைந்து உருவாக்கியுள்ள கோவீஷில்டை அதிக விலை கொடுத்து (ரூ.600) பெறுபவர்களாக இந்தியர்கள் இருக்க உள்ளனர்.
புனேவின் சீரம் நிறுவனம் ஒப்பந்த முறையில் இந்த தடுப்பூசியை த்யாரித்தாலும், அதன் தலைவர் அடர் பூனவல்லா ஒரு டோஸுக்கு ரூ. 150 என்ற லாபத்தை ஈட்டுகிறோம் என்று கூறியிருந்தார். நாங்கள் முதல் 100 மில்லியன் டோஸ்களுக்கு ரூ .200 சிறப்பு விலையை இந்திய அரசுக்கு மட்டுமே வழங்கியுள்ளோம்… பின்னர், நாங்கள் தனியார் சந்தைகளில் ரூ .1,000க்கு இந்த தடுப்பூசிகளை விற்பனை செய்வோம் என்று பூனவல்லா, முதல் ஏற்றுமதி முடிந்த பிறகு ஏ.என்.ஐக்கு தெரிவித்தார். ஆரம்பத்தில் ஒரு டோஸின் விலை ரூ. 1000 என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சீரம் நிறுவனத்தின் தடுப்பூசி ஒரு டோஸின் விலை ரூ. 600க்கு விற்பனை செய்யப்படும் என்று கொரோனா இரண்டாம் தொற்று மிகவும் தீவிரமாக பரவி வருகின்ற காலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஷாட்டுக்கு 8 அமெரிக்க டாலர்கள் ஆகும். உலகில் வேறெந்த சந்தையில் விற்கப்படும் தடுப்பூசியின் விலையைக் காட்டிலும் இதன் விலை அதிகம்.
புதிய அளவிலான கொள்முதல் செலவுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மாநில அரசுகள் முடிவு செய்தால், மாநில அரசின் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஒவ்வொரு இந்தியர்களும் தங்கள் பைகளில் இருந்து ஒரு டோஸுக்கு ரூ .400 (அல்லது 5.30 டாலருக்கு மேல்) பணம் செலுத்த வேண்டும்.
ரூ. 400 என்ற கொள்முதல் விலையானது மாநில அரசுகளுக்கும், புதிய கொள்கைகளின் படி மத்திய அரசுக்கும் பொருந்தும். இந்த விலையானது அஸ்ட்ர்ஜென்காவிடம் இருந்து நேரடியாக மருந்துகளைப் பெறும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன்கள் தரும் விலையைக் காட்டிலும் அதிகம்.
வங்கதேசம், சௌதி மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளில் விநியோகிக்கப்படும் எஸ்.ஐ.ஐகளின் தடுப்பூசி விலையை காட்டிலும் அதிகம். அனைத்து நாடுகளிலும் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் அரசு அந்த நிதி சுமையை ஏற்றுக் கொள்கிறது. ஆஸ்ரெனெக்கா மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் இந்த தடுப்பூசியை உருவாக்க சீரம் நிறுவனம் அந்த இரண்டு நிறுவனங்களுடன் கூட்டு வைத்து இந்த தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறது. மேலும் இந்தியாவில் தடுப்பூசி குறித்த ஒரு ஆய்வையும் நடத்தியது.
புதன்கிழமை அன்று பூனவல்லா, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ரூ. 3000 கோடி முன்பணத்தை கொண்டு 110 மில்லியன் கோவிஷீல்டுகளை உருவாக்க முடியும் என்று கூறினார். இதே வரிசையில் ஒரு மாதத்திற்கு முன்பு மத்திய அரசு அட்வான்ஸ் செலுத்தியதால் ரூ. 150 என்ற பழைய விலைக்கு அது உற்பத்தி செய்து தரப்படும்.
இதன் பொருள் கூடுதல் அளவுகளுக்கு அரசாங்கத்திற்கு சுமார் 1,350 கோடி ரூபாய் மிச்சமாகும். எவ்வாறாயினும், முன்னுரிமை குழுக்களுக்கு நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் கோவிஷீல்ட்டைப் பயன்படுத்துவதற்கான எந்தவொரு புதிய உத்தரவும், டோஸூக்கு ரூ. 400 என்ற விலையில் தான் கிடைக்கும் என்று பூனவல்லா கூறினார். இதன் பொருள் புதிய கோவிஷீல்டில் 35 மில்லியனுக்கும் குறைவான அளவுகளை அரசாங்கத்தால் தன்னுடைய முன்பணத்தின் மூலம் பெறமுடியும்.
27 நாடுகள் கொண்ட ஐரோப்பிய ஒன்றித்தில் அதிக விலை உற்பத்தி செய்யும் இடமான பகுதிகளில் தடுப்பூசியின் ஷாட் ஒன்றுக்கு $ 2.15- $ 3.50 செலுத்தப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம், தற்செயலாக, ஆகஸ்ட் 2020இல் அஸ்ட்ராஜெனெகாவில் 399 மில்லியன் டாலர்களை அவசர தேவை நிதியாக முதலீடு செய்தது, அதற்கு பதிலாக தடுப்பூசியின் 400 மில்லியன் டோஸ்களை திரும்ப பெற்றது.
பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் தொகுத்த தரவுகளின்படி, AZவில் சிறிய முதலீடு செய்த இங்கிலாந்து, ஒரு டோஸுக்கு சுமார் $ 3 செலுத்துகிறது மற்றும் அமெரிக்காவிற்கு ஒரு டோஸுக்கு 4 டாலர் என்ற அளவில் தடுப்பூசி வழங்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இருநாடுகளும் அஸ்ட்ராஜெனெகாவுக்கு நேரடியாக இந்த தொகையை செலுத்துகின்றன.
இதற்கிடையில், உரிமம் பெற்ற மற்றொரு தயாரிப்பாளரான அரசுக்கு சொந்தமான ஓஸ்வால்டோ குரூஸ் அறக்கட்டளை (ஃபியோக்ரூஸ்) மூலம் பிரேசில் AZ தடுப்பூசிக்கு ஒரு டோஸுக்கு 3.15 டாலர் செலுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
ராய்ட்டர்ஸின் அறிவிப்பு படி வங்க தேசம் சீரம் நிறுவனத்தின் தடுப்பூசி டோஸ் ஒன்றுக்கு 4 அமெரிக்க டாலர்களை செலுத்துகிறது என்று கூறியது. பி.பி.சி. டாக்காவில் சுகாதாரத்துறை அமைச்சகம் 5 டாலருக்கு ஒரு டோஸ் என்று குறிப்பிட்டது. இது தடுப்பூசியை வங்கதேசத்தில் விநியோகிக்கும் பெக்ஸிமோ விநியோகஸ்தரின் மார்ஜினையும் உள்ளடக்கியது.
தென்னாப்பிரிக்கா மற்றும் சவுதி அரேபியா ஆகிய இரண்டு நாடுகளும் SIIக்கு ஒரு டோஸுக்கு 5.25 டாலருக்கு மேல் செலுத்தியுள்ளதாக யுனிசெப்பின் கோவிட் தடுப்பூசி சந்தை டாஷ்போர்டு தெரிவித்துள்ளது, இது வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட விலை தகவல்களை சேகரிக்கிறது. இது மானியமின்றி, மாநில அரசு மருத்துவமனைகளில் இந்தியர்கள் தடுப்பூசி பெறும் விலையை விட அதிகம்.
கோவிஷீல்டிற்கு ஒரு டோஸுக்கு ரூ.400 என்ற விலையை அதிகரிக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டதா என்பது குறித்து சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் மற்றும் சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் ஆகியோரிடம் கேட்ட கேள்விகள் பதிலளிக்கப்படவில்லை. SII யிடம் கேட்ட கேள்விகளுக்கும் பதில் கிடைக்கவில்லை.
முழுமையான தகவல்கள் இன்னும் கிடையாத நிலையில், தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட மக்கள் எவ்வளவு பணத்தை செலுத்த வேண்டும் என்பதும் தெளிவாக இல்லை. இது “உன்னிப்பாக கண்காணிக்கப்படும்” என்று அரசாங்கம் கூறியுள்ள நிலையில், 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் தொடர்ந்து அரசாங்க மருத்துவமனைகளில் இலவசமாக கிடைக்கும்.மத்திய அரசு கோவிஷீல்டின் விலையை ரூ. 150 + ஜி.எஸ்.டி என்றே பேரம் பேசியது. ஆனால் தற்போது அரசாங்கத்திற்கு ஒரு டோஸிற்கு ரூ. 150 என்பது குறிப்பிட்ட காலம் வரை தான் என்று தெளிவுப்படுத்தியுள்ளார் பூனவல்லா.
“இது மோடி அரசாங்கத்தின் வேண்டுகோளை அடிப்படையாகக் கொண்டது, லாபத்தை தியாகம் செய்தோம் – நாங்கள் எந்த லாபத்தையும் ஈட்டவில்லை என்று நான் கூறமாட்டேன் – ஆனால் நாங்கள் ‘சூப்பர் லாபம்’ என்று அழைப்பதை தியாகம் செய்துள்ளோம், இது நாங்கள் திறனை மேலும் வளர்த்துக் கொள்ளவும், புதுமையானது மற்றும் மேற்கத்திய நிறுவனங்களுடன் போட்டியிட உதவும் ஒன்றாகும்”என்று பூனவல்லா ஏப்ரல் 6 அன்று என்டிடிவிக்கு தெரிவித்தார்.
மற்றொரு நேர்காணலில், புதன்கிழமை அதிக விகிதங்களை அறிவித்த பின்னர் சிஎன்பிசி டிவி -18 க்கு, எஸ்ஐஐ பணத்தை இழந்து வருவதாகக் கூறினார்: “எனது வருவாயில் 50 சதவீதம் அஸ்ட்ராசெனெகாவுக்கு ராயல்டியாக வழங்கப்பட வேண்டும், அதனால்தான் ரூ .150 விலை உண்மையில் அர்த்தமற்றவையாக இருந்தது. ” கோவிஷீல்ட் இந்தியாவுக்கான விலை இப்போது மற்ற நாடுகளை விட அதிகமாக உள்ளது என்று அவர் கூறினார், ஏனெனில் அதன் விலைகள் நீண்ட காலத்திற்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உறுதி செய்யப்பட்டது. அப்போது தடுப்பூசியின் வெற்றி குறித்த நிச்சயமற்ற நிலையே விளங்கியது என்றார் அவர்.
source https://tamil.indianexpress.com/india/serum-institutes-rs-600-dose-for-covishield-in-private-hospitals-is-its-highest-rate-the-world-over-295282/