செவ்வாய், 27 ஏப்ரல், 2021

உதவத் தயார்; அரசியல் ஒருமித்த கருத்தே நமக்கு தேவை – சோனியா காந்தி

 வேறுபாடுகளுக்கு அப்பால், ஒன்றாக இணைந்து இந்த தேசத்தை கொரோனா போன்ற பேரழிவில் இருந்து காக்க தலைவர் ஒருவர் வேண்டும் என்று திங்கள் கிழமையன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அவர் வழங்கிய பிரத்யேக பேட்டியில், காங்கிரஸ், இந்த அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருந்தது. இது போன்ற பொதுமக்கள் சுகாதார அவசரநிலைமையின் போது தலைமைத்துவத்தை மத்திய அரசு கைவிடுவது அதிர்ச்சியூட்டுகிறது. மேலும் அனைத்து தருப்பிரலும் நிர்வாகம் சரிவடைந்திருப்பதால் மக்கள் கைவிடப்பட்டிருப்பதாக உணருகின்றனர் என்றார் அவர்.

நீயா நானா என்பதற்கு பதிலாக நாமா? கொரோனா வைரஸா? என்பது தான் கொரோனாவிற்கு எதிரான போராக கருதுகிறோம். இது அரசியல் சீரமைப்புகளுக்கு அப்பாற்பட்டது. நாம் ஒரு நாடாக இணைந்து கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டும். மோடி அரசு இந்த போர் கொரோனாவுக்கு எதிரானதே தவிர காங்கிரஸ் கட்சிக்கோ அல்லது மற்ற அரசியல் எதிர்க்கட்சிக்கோ எதிராக இல்லை என்பதை உணர வேண்டும்.

மேலும் படிக்க : சென்னையை அச்சுறுத்தும் கொரோனா; கட்டுக்குள் கொண்டு வருமா மாநகராட்சி?

அரசியல் ஒருமித்த கருத்து என்பது மிகவும் அவசியம். நாம் அனைவரையும் ஒன்றிணைத்து தற்போது நாம் சந்தித்து வரும் பேரழிவுக்கு எதிராக போரிட வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மோடியின் அரசு ஒருமித்த கருத்தை வற்புறுத்துவதை தான் விரும்புகிறது என்பதை நிரூபித்துள்ளது. சவாலான காலங்களில் அரசியல் தலைமை அரசியல் வேறுபாடுகளுக்கு மேலாக உயர வேண்டும் என்று நான் நம்புகிறேன். கடந்த காலங்களில் இது போன்று நாம் நிறைய செய்துள்ளோம். ஒரு நாடாக, ஒரு ஜனநாயகமாக இது போன்ற சூழலில் இந்தியா ஒன்றாக இணைந்துள்ளது என்று சோனியா கூறியுள்ளார்.

ஒரு எதிர்க்கட்சியாக, காங்கிரஸ் அரசாங்கத்திடமிருந்து வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்த வேண்டும், மக்களைக் காப்பாற்ற வேண்டும், உயிர்களைக் காப்பாற்றுவதை விட இப்போது எதுவும் முக்கியமில்லை என்பதை அங்கீகரிக்க அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சோனியா காந்தி கூறினார்.

முழு அளவிலான ஆட்சி சரிவு மற்றும் பொறுப்பை விட்டுக் கொடுத்து மக்கள் கைவிடப்பட்டது போன்று இது உள்ளது. நாங்கள் மக்களின் குரல்களை கேட்டு அவர்களின் வேதனையை வெளிப்படுத்துவதற்கு எதிர்க்கட்சியாக எங்களின் பங்கு அதிகம் என்று அவர் கூறினார். அரசு காங்கிரஸ் கட்சியை அணுகி உதவி கோரினால் காங்கிரஸ் உதவுமா என்ற கேள்விக்கு, நிச்சயமாக, தெளிவாக ஆம் என்று தான் கூறுவேன் என்றார்.

அரசாங்கத்தின் உடனடி கவனம் தேவைப்படும் பல சிக்கல்களை பட்டியலிட்டார் சோனியா காந்தி. ஆக்ஸிஜன் வழங்குதல், மருந்துகளை கள்ள சந்தைகளுக்கு செல்லாமல் தடுத்தல், படுக்கைகளை உறுதி செய்தல், வீட்டில் இருந்தே சிகிச்சை பெறுவதற்கான நெறிமுறைகள், தடுப்பூசிகள், விரைவாக தடம் அறிதல் மற்றும் சோதனை, வைரஸின் பின்தங்கிய மற்றும் மரபணு வரிசைப்படுத்துதலுக்கான பொருளாதார ஆதரவு ஆகியவை அதில் அடங்கும்.

அரசாங்கமும் இந்தியா இன்கும் தங்கள் வளங்களை ஒன்றிணைத்து புதிய மற்றும் போதுமான மருத்துவமனை உள்கட்டமைப்பை ஒரு போர்கால ரீதியில் உருவாக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். தவிர, மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ ஊழியர்கள், முன்கள மருத்துவ பணியாளர்கள் மற்றும் பிற முன்கள கொரோனா தடுப்பு பணியாளர்களை நிதி ரீதியாக ஊக்குவிக்கவும், சிறப்பு ரயில்கள் மற்றும் பிற வழிகளில் நகரங்களில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாப்பாக கொண்டு செல்லவும் அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

source https://tamil.indianexpress.com/india/ready-to-help-we-need-political-consensus-to-fight-covid-sonia-gandhi-296243/