வியாழன், 15 ஏப்ரல், 2021

தமிழகத்தில் ஒரே நாளில் 7819 பேருக்கு கொரோனா: டாப் 10 மாவட்டங்கள் பட்டியல்

 இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் இன்று பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்து வருகிறது. இந்த கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில், மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இதனால் தொற்று பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக அம்மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடர்ந்து வருகிறது. ஆனாலும் பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை தொட்டு வருகிறது. இதில் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பதிப்பு பெரும் உயர்வை சந்தித்து வருகிறது. தொடக்கத்தில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், கடந்த வாரம் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் 6 ஆயிரத்தை நெருங்கிய தொற்று பாதிப்பு இன்று 7 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7819-ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,54,948 ஆக உயர்ந்துள்ளது.  மேலும் தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று பாதிப்புக்கு 25 பேர் பலியான நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 12,970 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் தமிழகத்தில், இன்று ஒரே நாளில், 3,464 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 8,87,663 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-news-update-covid-19-update-in-april-14-tamilnadu-291958/

Related Posts: