ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

வாக்கு எண்ணும் மையத்திற்குள் கணினி நிபுணர்கள் : திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

 தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 2-ந் தேதி நடைபெறவுளள நிலையில், வாக்கு எண்ணும் மையத்திற்குள் கணினி நிபுணர்கள் உள்ளே நுழைந்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி தமிழகம் புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆனால் அசாம மற்றும் மேற்குவங்கத்தில் இன்றும் 4 கட்ட வாக்குப்பதிவு மீதமுள்ளதால், 5 மாநிலங்களுக்கும் சேர்த்து மே 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆனால் தமிகத்தில் வாக்குப்பதிவிற்கும் வாக்குள் எண்ணப்படும் நாளுக்கும் சுமார் ஒரு மாதம் இடைவெளி இருப்பதால், இந்த இடைவெளி ஏற்றுக்கொள்ள முடியாது வாக்கு எண்ணிக்கை உடனடியாக நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இந்த கோரிக்கைக்கு தேர்தல் ஆணையம் செவிசாய்க்கவில்லை. இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் மையங்களில் நான்கு அடுக்கு பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் பாதுக்காக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பையும் மீறி தேவையற்ற ஆட்கள் நடமாட்டம் இருப்பதாகவும், அடையாளம் தெரியாத வாகனங்கள் சென்று வருவதாகவும், மடிக்கணினியுடன் வெளியாட்கள் உள்ளே சென்று வருவதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இதில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை லயோலா கல்லூரியில் கழிவறை வசதியுடன் கண்டெய்னர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்த்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு குறித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், நெய்வேலி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தெரிவிக்கப்படாத காரணங்களுக்காக என்ற காரணம் சொல்லி கணினி நிபுணர்கள் மூன்று பேருக்கு நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டு,  வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்றிருக்கிறார்கள் என முக.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/election/tamilnadu-assembly-election-mk-stalin-say-about-computer-experts-293014/

Related Posts: