வியாழன், 8 ஏப்ரல், 2021

ரஃபேல் ஒப்பந்தத்தில் அடிபடும் அகஸ்டா வழக்கில் கைதானவர் பெயர்

 Arrested in Agusta case, middleman named in deal to make Rafale models : ஃபிரான்சின் போர் விமானமான ரஃபேலின் உற்பத்தியாளரான டசால்ட் ஏவியேசன் நிறுவனம், இடைத்தரகர் சூஷன் குப்தாவிற்கு 5,08,925 யூரோ டாலர்களை 1 மில்லியனுக்கான இன்வாய்ஸிற்கு எதிராக வழங்கியுள்ளது. இந்த சூஷன் குப்தா ஏற்கனவே அக்ஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் விசாரணை செய்யப்பட்டு வரும் நபர் என்பதை ஃபிரெஞ்ச் இணைய விசாரணை இதழான மீடியாபார்ட் திங்கள் கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.


2017ம் ஆண்டு ஃபிரான்சின் ஊழல் தடுப்பு முகமையான ஏ.எஃப்.ஏவால் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட தணிக்கையின் போது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த பணம் ரஃபேல் போர் விமானங்கள் போன்று 50 பெரிய மாதிரிகளை தயாரிக்க டெஃப்சிஸ் என்ற நிறுவனத்திற்கு, 2016ம் ஆண்டு இந்தியா – ஃபிரான்ஸ் ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு வழங்கப்பட்டது என்று டசால் நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் தொடர்பான ஆதாரங்களை ஏ.எஃப்.ஏ முகமைக்கு டசால்ட் நிறுவனம் வழங்கவில்லை என்பதை மீடியாபார்ட் கூறியுள்ளது.

அனைத்து வெளிப்படையான தர்க்கங்களுக்கு மத்தியிலும் இந்த தகவல்களை வழக்கறிஞர்களிடம் எடுத்து செல்லவில்லை ஏ.எஃப்.ஏ என்று மீடியாபோர்ட் தெரிவித்துள்ளது. மூன்று பிரிவுகளை இந்த செய்தி குறிப்பை ரஃபேல் பேப்பர்ஸ் என்று அறிவித்துள்ளது மீடியா பார்ட். டசால்ட் நிறுவனம் தன்னுடைய அறிவிப்பை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், அப்படியான போர் விமானங்கள் இருப்பது குறித்தோ, டெலிவர் செய்யப்பட்டது குறித்தோ ஒரு பக்க ஆவணத்தையும் கூட வெளியிடவில்லை. நிதி பரிவர்த்தனைகளை மறைக்க வடிவமைக்கப்பட்ட ஒரு போலியான கொள்முதல் என்று காவல்த்துறையினர் கூறுகின்றனர்.

இந்த டெஃப்சிஸ் சொலியூசன்ஸ் நிறுவனம் சூஷன் குப்தா குடும்பத்திற்கு சொந்தமானது. அக்குடும்ப உறுப்பினர்கள் பலரும் மூன்று தலைமுறையாக விமானம் மற்றும் பாதுகாப்புத்துறையில் கொள்முதல் செய்ய இடைத்தரகராக பணியாற்றி வருவதாக மீடியாபார்ட் செய்தி தெரிவித்துள்ளது. சூஷன் குப்தா டசால்ட் நிறுவனத்தின் ஏஜெண்ட்டாக ரஃபேல் ஒப்பந்தத்தில் பணியாற்றினார். மேலும் இந்திய பாதுகாப்புத்துறையின் ரகசியமான ஆவணங்களை அவர் கைப்பற்றியதாகவும் அவர் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது.

ரூ. 3,600 கோடி மதிப்பிலான வி.வி.ஐ.பி.க்கான விமானங்களை பெறுவதில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் மார்ச் 2019ம் ஆண்டு அமெரிக்க பிரஜையான குப்தாவை அமலாக்கத்துறை கைது செய்தது. இதனையடுத்து, அகுஸ்டாவெஸ்ட்லேண்டிற்கான ஒப்பந்தத்தை செயல்படுத்த இந்தியாவில் செல்வாக்கு மிக்கவர்களுக்கு கிக்பேக் கொடுத்ததாக கூறப்படும் ரூ .55.83 கோடியை மோசடி செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது அமலாக்கத்துறை. பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

சூஷன் குப்தா மற்றும் அவருடைய சகோதரர் சுஷாந்த் குப்தா இருவரும் டெஃப்சிஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் பதவியில் இருந்து 2018ம் ஆண்டு விலகினார்கள். இருப்பினும் தங்களின் குடும்ப நிறுவனமான டி.எம்.ஜி. ஃபினான்ஸஸ் அண்ட் இன்வெஸ்ட்மெண்ட் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் மூலம் நடத்தி வந்தனர். அவர்களையும் அவர்களின் வழக்கறிஞர்களையும் இது காரணமாக தொடர்பு கொண்ட போதும் அவர்கள் பதில் ஏதும் கூறவில்லை. இந்த டெஃப்சிஸ் நிறுவனம் 2007ம் ஆண்டு பிஸ்வா பிஹாரி மிஸ்ரா என்ற ஐ.ஏ.எஃப். அதிகாரியால் துவங்கப்பட்டது. அவருடைய குடும்பம் பெங்களூரில் வசித்து வந்தது. மிஸ்ரா மற்றும் அவரது மனைவி தங்களின் பங்குகளை ஸ்பைரல் இ சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிட்டட் மற்றும் ஃபோர்சைட் சொலியூசன் நிறுவனத்திற்கு 2008ம் ஆண்டு விற்றுவிட்டனர். இந்த இரண்டு நிறுவனங்களும் இரண்டு நிறுவனங்கள் பின்னர் டி.எம்.ஜி ஃபினான்ஸஸ் மற்றும் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்தது.

மிஸ்ராவிடம் குப்தாக்களுடனான கூட்டணி குறித்து பேசிய போது, அவர்களுடன் வேறெந்த தொடர்பும் கிடையாது. முதலீட்டாளர்களாக பணத்துடன் வந்தார்கள். நான் 2012ம் ஆண்டு நிறுவனத்தில் இருந்து வெளியேறினேன். கடந்த 10 வருடங்களாக அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாத காரணத்தால் என்னால் இது குறித்து வெளியாகி இருக்கும் செய்தி குறிப்பிற்கு பதில் கூற இயலாது என்றார்.

மீடியாபோர்ட் அறிக்கைக்கு பதில் அளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளார் ரந்தீப் சுர்ஜேவாலா, காங்கிரஸ் இது தொடர்பாக விரிவான விசாரணையை வேண்டுகிறது என்றார். பொதுக்கருவூலத்திற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது, ஊழல் மற்றும் கமிஷன் செலுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளை மோடியின் அரசு மீண்டும் எதிர்கொள்கிறது என்று கூறினார். இரண்டு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இடைத்தரகர் மற்றும் கமிஷன் பணம் எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதை அரசு விளக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பு கூறியுள்ளது.

2019ம் ஆண்டு தேர்தலுக்கு முபு, காங்கிரஸ் தலைமையிலான அரசு செலுத்த விளைந்த கட்டணத்தை காட்டிலும் அதிக விலையை போர் விமானத்திற்கு தருவது குறித்து குற்றச்சாட்டு எழுந்தது மட்டும் அல்லாமல், அனில் அம்பானிக்கு சொந்தமாக உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக அரசு செயல்படுவது குறித்தும் எதிர்க்கட்சி குற்றச்சாட்டினை முன்வைத்தது. அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனங்கள் ரூ .30,000 கோடி மதிப்புள்ள ஆஃப்செட் ஒப்பந்தங்களை வாங்குகின்றன.

பாஜக இந்த குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை என்று கூறியுள்ளது. மேலும் ஏற்கனவே இந்த ஒப்பந்தம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்ற மனுவை உச்ச நீதிமன்றம் 2018ம் ஆண்டு நிராகரித்தது. இந்திய தணிக்கை அதிகாரியும் கூட இதில் தவறுகள் ஏதும் நடக்கவில்லை என்றது அவருடைய கட்சி.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத், 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்த ஒப்பந்தத்தை மிகப்பெரிய விசயமாக முன்வைத்தது எதிர்க்கட்சிகள் ஆனாலும் மோசமாக தோல்வியை தழுவின. மீடியாபார்ட் அறிக்கை பிரான்சில் “பெருநிறுவன போட்டி” காரணமாக இருக்கலாம் என்று கூறினார். இதற்கு முன்னர் காங்கிரஸ் இந்த பிரச்சினையை எழுப்பியதாகவும், ஆனால் உச்சநீதிமன்றமோ அல்லது சிஏஜியோ எந்த தவறும் கண்டுபிடிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த ஒப்பந்தம் குறித்து நீதிமன்ற கண்காணிப்பு கோரி தலைவர்கள் அருண் ஷூரி, யஷ்வந்த் சின்ஹா, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங் உள்ளிட்ட பலர் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் 2018 டிசம்பரில் தள்ளுபடி செய்தது.

முடிவெடுக்கும் செயல்முறையை சந்தேகிக்க எந்த சந்தர்ப்பமும் இல்லை” என்றும் அது நீதிமன்றத்தின் வேலை அல்ல என்று கூறி விலை நிர்ணயம் என்ற கேள்விக்கு வர மறுத்துவிட்டது உச்ச நீதிமன்றம். நவம்பர் 2019 இல், அப்போதைய இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான பெஞ்ச, ஷூரி, சின்ஹா மற்றும் சிங்கின் மேல் முறையீட்டு மனுவையும் நிராகரித்தது.

source https://tamil.indianexpress.com/india/arrested-in-agusta-case-middleman-named-in-deal-to-make-rafale-models-289157/

Related Posts: