
மொயீன் அலி குறித்து வங்கதேச எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் வெளியிட்ட கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் மொயீன் அலிக்கு ஆதரவாக இருந்தனர். “மொயீன் அலி கிரிக்கெட் விளையாடாமல் இருந்திருந்தால் இந்நேரத்திற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் சேர சிரியாவிற்கு சென்றிருப்பார்” என்று தஸ்லீமா தன்னுடைய ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
உலகம் முழுவதும் நன்றாக தெரிந்த, இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக, குறிப்பாக இங்கிலாந்தியில் வளர்ந்து வரும் ஆசிய வேர்களை கொண்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார் மொயீன் அலி. ஜோஃப்ரா ஆர்ச்செர் மற்றும் பென் டக்கெட் உள்ளிட்ட அவருடைய அணி வீரர்கள் பலரும் அவருக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் இந்திய ப்ரீமியர் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்கிஸ் அணியில் விளையாட உள்ளார்.
இது போன்ற ஒரு ட்வீட்டை அவர் ஏன் வெளியிட்டார் என்று இதுவரை தெரியாத நிலையே உள்ளது. கடந்த வாரம் சி.எஸ்.கே. நிர்வாகத்திடம் மதுபான உற்பத்தி நிறுவனத்தின் லோகோவை நீக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதாக கூறி செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக சி.எஸ்.கே. நிர்வாகத்திடம் பேசிய போது அப்படியான கோரிக்கையை அவர் வைக்கவில்லை என்பதை உறுது செய்தது.
அந்த ட்வீட்டில் என்ன கூறப்பட்டது?
“If Moeen Ali were not stuck with cricket, he would have gone to Syria to join ISIS” என்று தன்னுடைய ட்விட்டரில் கூறியிருந்தார். இது தொடர்பாக மதசார்பற்ற மனிதவியலாளர் மற்றும் பெண்ணுரிமைக்காக குரல் கொடுப்பவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் எழுத்தாளர், தஸ்லீமாவிடம் பேசிய போது வெறுப்பாளர்களுக்கு நன்றாகவே தெரியும் அந்த ட்வீட் எவ்வளவு கிண்டலாக இருந்தது என்று. ஆனால் அவர்கள் மதசார்பற்ற இஸ்லாமிய சமூகத்தை உருவாக்கும் என்னுடைய முயற்சிகளை அவர்கள் அவமதிக்கின்றனர். மனித குலத்தின் மிகப்பெரிய துயரங்களில் ஒன்று பெண்கள் சார்பு இடதுசாரிகளே பெண்கள் விரோத இஸ்லாமியவாதிகளை ஆதரிப்பதாகும்” என்று கூறினார்.
தஸ்லீமா குறித்து ஒரு பார்வை
மதம் குறித்து தன்னுடைய கருத்தினை வைக்கும் போது பல்வேறு விதங்களில் தாக்குதலுக்கு ஆளானார் தஸ்லீமா. வங்கத்தேசத்தில் இருந்து அவர் 1994ம் ஆண்டு நாடு கடத்தப்பட்டார். அவருடைய வங்கதேச கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளது. மொயீன் குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கு கடுமையான விமர்சனத்தை பெற்றார்
மொயீன் அலியின் சக விளையாட்டு வீரர்கள் கூறுவது என்ன?
நீங்கள் நலமாக இருக்கின்றீர்களா? நீங்கள் நலமாக இருப்பது போன்று எனக்கு தோன்றவில்லை என்று ஆர்ச்சர் கூறியிருந்தார். ”நகைச்சுவையாகவா? இங்கே யாரும் சிரிக்கவில்லை. நீங்களும் கூடத்தான். ஆனால் நீங்கள் இந்த ட்வீட்டை டெலிட் செய்ய முடியும்” என்று கூறியிருந்தார்.
நம்பவே முடியவில்லை. அருவருக்கத்தக்க பதிவு என்று இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் சகீப் முகமது கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த செயலில் பிரச்சனை இது தான். இது போன்ற மோசமான கருத்துகளை அவர்கள் பதிவிடுவார்கள். இது மாற்றம் அடைய வேண்டும். இந்த அக்கௌண்ட்டை ரிப்போர்ட் செய்யுங்கள் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் டக்கெட் ட்வீட் வெளியிட்டார்.
இதற்கு முன்பு இது போன்று தன்னுடைய மதத்தின் காரணமாக அவர் தாக்குதலுக்கு ஆளானாரா?
1987ம் ஆண்டு இங்கிலாந்தின் பிர்மிஙாமில் பிறந்தார் மொயீன். இஸ்லாமியத்தை பின்பற்றி வருகிறார். “நான் இஸ்லாமியர். நான் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர். நான் இது இரண்டை நினைத்தும் பெருமை கொள்கிறேன் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆசிய வேர்களை கொண்ட குழந்தைகள் என்னை பார்த்து, கிரிக்கெட்டை கனவு காண கற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
2014ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக சவுதாம்ப்ட்டனில், பாலஸ்தீனத்தை விடுவிக்கவும், காஸாவை பாதுகாக்கவும் என்ற ஸ்லோகன்கள் அடங்கிய பேண்டுகளை கையில் அணிந்திருந்தார். இது கடுமையான விமர்சனங்களை அவர் மீது ஏற்படுத்தியது. விஸ்டனின் கூற்றுப்படி, மொயீனுக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும் கூறப்படுகிறது.
மொயீன், காஸா செயற்பாட்டாளாரா?
தன்னுடைய சொந்த ஊரில் காஸாவிற்காக நிதி சேகரித்தார். ஆனால் செயற்பாட்டாளராக அவர் செயல்படவில்லை“ அவர் என்ன நம்பினாரோ அதையே செய்தார். ஆனால் அது மிகப்பெரிய பிரச்சனையாக உருமாறும் என்று நான் நினைக்கவே இல்லை என்று மொயீனின் சகோதரர் கதீர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் ஒரு முறை கூறினார். இந்த செய்திகள் மனிதாபிமானம் மற்றும் அரசியல் சார்பற்றவை என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது, ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) மொயீனை எச்சரித்திருந்தது.
source : https://tamil.indianexpress.com/explained/how-the-cricketing-world-rallied-around-moeen-ali-after-taslima-nasreens-isis-tweet-289566/