ஆதார் கார்டு நகலைப் பகிர்வது பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி தவறாகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறதா? UIDAI முதலில் ஆதார் கார்டு நகலை எந்த நிறுவனத்துடனும் பகிர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில், அதனை திரும்பபெறுவதாக அறிவித்தது. இது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
UIDAI வெளியிட்ட முதல் வார்னிங் என்ன?
மே 27 அன்று UIDAI வெளியிட்ட அறிக்கையில், பொது மக்கள் எந்தவொரு நிறுவனத்துடனும் ஆதார் நகலைப் பகிர வேண்டாம். அதற்குப் பதிலாக, ஆதார் எண்ணின் கடைசி நான்கு டிஜிட் மட்டுமே தெரியும் Masked ஆதார் பயன்படுத்தப்பட வேண்டும்.
மேலும், பொதுமக்கள் இ-ஆதாரைப் பொது கணினிகளில் பதிவிறக்க செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படி செய்தாலும், அதனை மறக்காமல் கணினியில் இருந்து டெலிட் செய்திட வேண்டும்.
UIDAI-லிருந்து உரிமத்தைப் பெற்ற நிறுவனங்கள் மட்டுமே ஒரு நபரின் அடையாளத்திற்கு ஆதாரைப் பயன்படுத்த முடியும். ஹோட்டல்கள்,திரைப்பட அரங்குகள் ஆதார் அட்டையின் நகல்களை சேகரிக்கவோ அல்லது வைத்திருக்கவோ அனுமதியில்லை. அப்படி செய்வது, ஆதார் சட்டம் 2016ன் கீழ் குற்றமாகும் என குறிப்பிட்டிருந்தனர்.
உங்களிடம் ஆதார் நகரை கேட்கும் நிறுவனங்கள் UIDAI-யிடம் உரிமை பெற்றுள்ளார்களா என்பதை செக் செய்திட பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
வார்னிங் திரும்ப பெற என்ன காரணம்?
நாட்டில் உள்ள பல தனியார் நிறுவனங்கள் ஆதார் அட்டையை அடையாளத்திற்கு கேட்கின்றனர். பயனர்களும் பகிர்ந்துகொள்கின்றனர். ஆனால், அவற்றை நிறுவனங்கள் தனிப்பட்டதாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கிறதா என்பது குறித்து தெளிவான விவரம் இல்லை. கடந்த காலங்களில், ஆதார் டேட்டா விற்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.
கோவிட்-19 சோதனையின் மூலம், பெரும்பாலான ஆய்வகங்கள் ஆதார் கார்டு நகலை கேட்பதை காண முடிந்தது. ஆனால், கோவிட்-19 பரிசோதனையைப் பெறுவதற்கு ஆதார் கார்டு பகிர்வது கட்டாயமில்லை
தொடர்ந்து, மே 29 அன்று UIDAI வெளியிட்ட அறிக்கையில், முன்னதாக மே 23 அன்று வெளியிட்ட எச்சரிக்கை அறிக்கையை திரும்பபெறுவதாக அறிவித்தது.
இந்த சுற்றறிக்கையின் மூலம் தவறான புரிதலுக்கும், தவறாக விளக்கமும் அளிக்கப்படவும் வாய்ப்பு உள்ளதால் உடனடியாக திரும்பப் பெறப்படுகிறது. ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் வழக்கம்போல் (சாதாரண எச்சரிக்கையுடன்) பயன்படுத்தலாம். அதைப் பாதுகாப்பாக வைத்திருக்க போதுமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன என குறிப்பிட்டுள்ளது.
ஆதார் கார்டு பாதுகாப்பாக வைத்திருக்கும் முறைகள்
ஒருவரின் ஆதார் அட்டை எண்ணை வேறு யாரும் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்ய சில ஸ்டெப்ஸ்கள் உள்ளன. அதாவது, two-factor authentication, பயோமெட்ரிக் லாக், Masked ஆதார், மெய்நிகர் அடையாள அட்டை என பல அம்சங்கள் ஆதார் கார்டை பாதுகாத்திட உள்ளன. அவற்றை இங்கே காணலாம்.
Two-factor authentication
ஆதார் உங்கள் முதன்மை மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி இணைக்கப்பட வேண்டியது அவசியம். ஏனெனில், ஆதார் கணக்கை யாராவது அணுக முயற்சிக்கையில், அந்த மொபைல் எண் மற்றும் மெயில் ஐடிக்கு தான் ஓன் டைம் பாஸ்வேர்டு அனுப்பப்படும். ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணை மாற்றிவிட்டால், உடனடியாக ஆதார் மையத்திற்கு சென்று மாற்றுவது அவசியமாகும். ஆதார் சரிபார்ப்பு OTP மூலம் மட்டுமே நடைபெறும்.
Masked Aadhaar copy
UIDAI இணையதளத்தில் இருந்து ‘மாஸ்க்டு ஆதார்’ நகலை பதிவிறக்கம் செய்யலாம். ஆதார் ஐடிக்குப் பதிலாக, இதனை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். இதில், தார் எண்ணின் கடைசி நான்கு டிஜிட் மட்டுமே தெரியக்கூடும். https://myaadhaar.uidai.gov.in இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில், Do you want a masked Aadhaar என்கிற ஆப்ஷனை கிளிக் செய்து, கடைசி நான்கு இலக்கங்களைக் கொண்ட பதிப்பைப் பதிவிறக்கம் செய்யுங்கள்.
Locking biometrics
உங்கள் ஆதார் பயோமெட்ரிக் தரவு தவறாகப் பயன்படுத்தப்படுமோ என்கிற கவலை இருந்தால், அதனை UIDAI தளத்திலே லாக் செய்யலாம். MyAadhaar டாஷ்போர்டில் அதற்கான ஆப்ஷனை கண்டறியலாம். நீங்கள் அதனை லாக் செய்துவிட்டால், கைரேகை, கருவிழி மற்றும் பேஸ் ஆகிவற்றை அங்கீகாரத்திற்காக பயன்படுத்த முடியாது. ஆனால், OTP அடிப்படையிலான அங்கீகாரம் தொடர்ந்து கிடைக்கும்.
பயனர்கள் விருப்பத்தைப் பொறுத்து இந்தத் தரவை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாகப் லாக் செய்யலாம். வங்கிக் கணக்கைத் திறப்பது போன்ற சில நோக்கங்களுக்காக அதனை தற்காலிகமாக ஓபன் செய்யலாம். டேட்டா லாக் செய்துவிட்டால், நீங்கள் பயோமெட்ரிக் சமர்ப்பித்த நிறுவனங்களாலும் அதனை மீண்டும் எங்கேயும் பயன்படுத்த முடியாது.
Use VID
மெய்நிகர் அடையாளம் என்பது “லிமிடெட் கேஒய்சி” ஆகும். இது பயனரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் அதே வேளையில், அங்கீகரிக்கும் நிறுவனத்திடம் இருந்து ஆதார் எண்ணை மறைத்திட உதவுகிறது. இது 16 இலக்க எண், ஆனால் தற்காலிகமானது. சில காலத்திற்கு மட்டுமே இந்த விஐடி செல்லுபடியாகும்.
பழைய விஐடி காலாவதியாகிவிட்டு, புதிய விஐடி உருவாக்க வேண்டும். ஆதார் கார்டிற்கு ஒரு நேரத்தில், ஒரு விஐடி மட்டுமே உபயோகத்தில் இருக்கும். விஐடியை ஆதார் ரெசிடென்ட் போர்டல் அல்லது iOS மற்றும் ஆண்ட்ராய்டில் உள்ள mAdhaar செயலியில் இருந்து உருவாக்கலாம்.
பயனர்கள் ஆதார் இணையதளத்தில் அவர்களுக்கே தெரியாமல் தரவு தவறாக பயன்படுத்தப்பட்டதா என்பதை authentication history இல் பார்க்கலாம். ஆனால், இந்த அம்சத்தை நாங்கள் பயன்படுத்திய போது, 2021 ஆம் ஆண்டு வரை தரவு history மட்டுமே இருந்தது.
source https://tamil.indianexpress.com/explained/securing-your-aadhaar-data-electronic-it-ministry-460969/