திங்கள், 6 ஜூன், 2022

இந்தத் தேதியில் பள்ளிகள் திறப்பு உறுதி:

 செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி; பள்ளி திறப்பில் எந்தவித மாற்றமும் இல்லை. திட்டமிட்டபடி ஜூன் 13-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும். கொரோனா பெருந்தொற்று பரவல் தற்போது மீண்டும் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலனுக்கு எந்தவிதத்தில் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றோம். அதனடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் எடுக்கப்பட வாய்ப்பு இருக்கின்றது.

நமது தமிழகத்திற்கு என்ன தேவை என்பதை நாம் முடிவு செய்யும் கூட்டத்திற்குத்தான் முக்கியத்துவம் தருவோம். அதுதான் நம் மாநிலத்திற்கும் நல்லது. நீட் தேர்வை நடத்துவதே பாஜக அரசு தான். ஆனால், பாஜக தலைவர் அண்ணாமலை நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரலாமே என நம்மிடம் கூறுகின்றார் என்றார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/anbil-mahesh-says-no-change-in-school-reopening-date-463381/