இங்கிலாந்தில் உள்ள இந்திய உயர் கமிஷன் கட்டிடத்திற்கு வெளியே காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியக் கொடியைக் கீழே இறக்காக்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கின் புகைப்படம் மற்றும் சுவரொட்டிகளுடன் போராட்டக்காரர்கள் வந்தனர். சுவரொட்டிகளில்–FreeAmritpalSingh, WeWantJustice, WeStandWithAmritpalSingh என்று குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த சம்பவத்தின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்திய உயர் கமிஷன் கட்டிடத்தின் பால்கனியில் ஒருவர் இந்தியக் கொடியைக் கீழே இறக்குவதை வீடியோவில் காணலாம். பின்னர் லண்டனில் உள்ள இந்திய உயர் கமிஷனில் உள்ள இந்தியப் பாதுகாப்புப் பணியாளர்களால் அந்த கொடி மீட்கப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியாவிற்கான இங்கிலாந்து உயர் ஸ்தானிகர் அலெக்ஸ் எல்லிஸ், இந்த கொடி இறக்க நிகழ்வுகளுக்குத் தனது கண்டனத்தை டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில் அவர், “இந்திய உயர் கமிஷனிற்கு எதிராக இன்று நடந்த இழிவான செயல்களை நான் கண்டிக்கிறேன் – இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.” என அவர் ட்விட் செய்துள்ளார்.
source https://news7tamil.live/khalistan-supporters-who-lowered-the-indian-national-flag-strong-protests.html