28 2 23
அமெரிக்காவை தளமாகக் கொண்ட டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் சேவை வழங்குநரான இக்னிதோ, தனது புதிய டெலிவரி மையத்தை சென்னை காரப்பாக்கத்தில் உள்ள டெக்கி பூங்காவில் தொடங்கியுள்ளது. நிறுவனங்களுக்கு AI சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் சேவை வழங்கவும், வாடிக்கையாளர்களுக்கு செயற்கை நுண்ணறிவு வகையில் டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் சேவைகளை விரைவுபடுத்துவதற்காகவும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகை குறித்து நிறுவனம் தகவல் வெளியிடவில்லை. ரிச்மண்ட் (அமெரிக்கா), கோஸ்டாரிகா, பெங்களூரு மற்றும் லண்டனுக்குப் பிறகு இது இக்னிதோவின் ஐந்தாவது பெரிய மையமாகும். சென்னையில் உள்ள புதிய மையம், வணிக செயல்முறைகளில் தரவு பகுப்பாய்வு மற்றும் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிறுவனங்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் உதவும் என்று இக்னிதோ தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள டெலிவரி சென்டர் நிறுவனம் தொழில்நுட்ப கூட்டாளர்களுடன் இணைந்து தீர்வு காணும். இக்னிதோ லேப்களை பயன்படுத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்னிதோ லேப் மைக்ரோசாப்ட், டோமோ, ஸ்னோஃப்ளேக், AWS, GCP, UI Path, Netskope உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இணைந்து செயல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளது. இக்னிதோ மையம் டேட்டா சயின்ஸ், பிராடக்ட் இன்ஜினியரிங், enterprise integration மற்றும் சைபர் பாதுகாப்பு ஆகிய சேவைகளை வழங்குகிறது.
source https://tamil.indianexpress.com/technology/us-based-ignitho-launches-new-ai-centre-in-chennai-601047/