திங்கள், 15 மே, 2023

சி.பி.எஸ்.இ ரிசல்ட்க்குப் பிறகு பொறியியல் கட் ஆஃப் எப்படி இருக்கும்? கல்வியாளர் அஷ்வின் விளக்கம்

 

12 5 2023 

Engineering
பொறியியல் கல்லூரி மாணவர்கள்

சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையில் இந்த ஆண்டு கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பச் செயல்முறை தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பொறியியல் படிப்புகளுக்கு நல்ல மவுசு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு மாநில வாரிய 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதேநேரம் சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 12 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகளுக்குப் பிறகும் இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் குறையும் என கல்வியாளர் அஸ்வின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், சி.பி.எஸ்.இ தேர்வுகளில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் மதிப்பெண்கள் குறைந்துள்ளதால், கடந்த ஆண்டை விட கட் ஆஃப் மதிப்பெண் ஆவரேஜ் ஆக 4.5 வரை குறைய வாய்ப்புள்ளது. இதேபோல் தமிழ்நாடு மாநில வாரிய தேர்வு முடிவுகளின்படி, கடந்த ஆண்டை விட கட் ஆஃப் மதிப்பெண் ஆவரேஜ் ஆக 7.5 வரை குறைய வாய்ப்புள்ளது.

ஒட்டுமொத்தமாக சி.பி.எஸ்.இ மற்றும் மாநில வாரிய மதிப்பெண்களுக்கு ஆவரேஜ் எடுக்கும்போது கட் ஆஃப் 6 வரை குறைய வாய்ப்புள்ளது. இது 160 மதிப்பெண்களுக்கு உரிய கட் ஆஃப் நிலவரமாகும். 160 க்கு கீழே செல்ல செல்ல கட் ஆஃப் அதிகரிக்கும். 110-155 கட் ஆஃப் மதிப்பெண்களில் ஏராளமான மாணவர்கள் உள்ளனர். எனவே இந்த மதிப்பெண்களில் கட் ஆஃப் கடந்த ஆண்டை விட அதிகரிக்கும். குறிப்பாக மாநில வாரிய தேர்வில் படித்தவர்களுக்கு கட் ஆஃப் அதிகரிக்கப் போகிறது.

கடந்த ஆண்டில் 200க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 199.5க்கே கிடைக்கும் 195க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 193.5க்கே கிடைக்கும். 190க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 188க்கே கிடைக்கும். 185க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 182க்கே கிடைக்கும். 180க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 175.5க்கே கிடைக்கும். 175க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 170க்கே கிடைக்கும். 165க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 160க்கே கிடைக்கும்.

160க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 154.5க்கே கிடைக்கும். 155க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 151க்கே கிடைக்கும். 150க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 147க்கே கிடைக்கும். 140க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 142 இருந்தால் தான் கிடைக்கும். 130க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 134 இருந்தால் தான் கிடைக்கும். அதேநேரம் 120க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 126 இருந்தால் தான் கிடைக்கும். 110க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 120 இருந்தால் தான் கிடைக்கும். 100க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 112 இருந்தால் தான் கிடைக்கும். கடந்த ஆண்டில் 90-145 கட் ஆஃப்க்கு கிடைத்த கல்லூரிகள் இந்த ஆண்டு அதிகமாக இருந்தால் தான் கிடைக்கும்.


source https://tamil.indianexpress.com/education-jobs/tnea-tamilnadu-engineering-expected-cut-off-2023-in-tamil-668338/