புதன், 31 மே, 2023

BHEL Jobs; பெல் நிறுவன வேலை வாய்ப்பு; பி.இ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

 BHEL jobs

பெல் நிறுவன வேலைவாய்ப்பு

சென்னையில் உள்ள பெல் (BHEL) நிறுவனத்தில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஜூன் 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இந்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் (Bharat Heavy Electricals Limited) நிறுவனத்தில் பயிற்சி பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 18 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Graduate Apprentices (Engineering)

காலியிடங்களின் எண்ணிக்கை: 18

கல்வித் தகுதி: 2020/ 2021/ 2022/ 2023 ஆம் ஆண்டுகளில் Bachelor’s Degree in Engineering/ Technology in Civil/ Mechanical Engineering படித்திருக்க வேண்டும்.

உதவித்தொகை; ரூ. 9,000

வயது தகுதி: 01.05.2023 அன்று 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகள் படி வரம்பில் குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் பொறியியல் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://pssr.bhel.com/Shared%20Documents/BHEL%20PSSR%20Notification-Graduate%20Apprentice%202023-24.pdf என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பித்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: SDGM (HR), PSSR, BHEL Integrated Office Complex, TNEB Road, Pallikaranai, Chennai-600100

விண்ணப்பிக்க கடைசி தேதி : 13.06.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://pssr.bhel.com/Shared%20Documents/BHEL%20PSSR%20Notification-Graduate%20Apprentice%202023-24.pdf என்ற இணைய தள பக்கத்தைப் பார்வையிடவும்.


source https://tamil.indianexpress.com/education-jobs/chennai-bhel-recruitment-2023-for-graduate-engineers-apprentices-jobs-apply-soon-681956/