24 5 23
சென்னையை அடுத்த மறைமலை நகரில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக சென்னை மண்டல சமூக நீதி பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திட கோரியும், சிறுபான்மையினரின் உரிமையை பறிக்கும் பொது சிவில் சட்டத்தை திணிக்க வேண்டாம் எனவும், சமூக நீதியை ஒழித்திடும் வகையில் உயர் சாதியினருக்கு கொண்டு வரப்பட்ட உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாநாடு நடைபெற்றது.
மாநாட்டிற்கு மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப் தலைமை தாங்கினார். மாநாட்டில் சிறப்பு விருந்தினராக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மமக பொதுச்செயலாளர் அப்துல் சமது, தமிழக சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் இரண்டு அவசர
ஊர்திகள் வழங்கப்பட்டன, மாநாட்டிற்காக சிறப்பான ஏற்பாடுகளை மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொதுசெயலாளர் யாக்கூப் மற்றும் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் ஜாஹீர் உசேன் ஆகியோர் அமைத்துக்கொடுத்தனர்.
-ரெ.வீரம்மாதேவி
source https://news7tamil.live/maraimalainagar-manithaneya-makkal-katchi-conduct-the-samooga-neethi-safety-manadu.html