மக்களுக்கு கோயம்பேடு மற்றும் தாம்பரத்திற்குப் பிறகு பெருங்களத்தூர் ஒரு முக்கியமான போக்குவரத்து முனையமாக இருக்கிறது.
பெருங்களத்தூர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள மோசமான உள்கட்டமைப்புகளைச் சுட்டிக்காட்டி சமூக ஆர்வலர்கள், போக்குவரத்து நடத்துநர்கள் மற்றும் பயணிகள் குரல் எழுப்பியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பிரதான வீதிக்கு அருகில் பேருந்துகள் நிறுத்தப்படுவதால் நிலைமை மோசமடைந்துள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
கழிவறை இல்லாததால் பெண்கள் மற்றும் முதியவர்கள் சிரமப்படுவதாகவும், பயணிகள் கழிப்பறையை பயன்படுத்த ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
மேலும், தனியார் வாகனங்களும் பஸ் நிறுத்தத்தில் நிறுத்துவதால், அவ்வழியாக செல்வதற்கு சிரமமாக உள்ளது. நிறுத்தத்தை கிளாம்பாக்கத்திற்கு மாற்றும் வரை தற்காலிக தங்குமிடங்களை அமைக்க அதிகாரிகளை வலியுறுத்தினர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/no-shelter-toilets-at-perungalathur-bus-stop-682916/