திங்கள், 29 மே, 2023

ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட குடும்பங்கள்; மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நேரில் புகார் அளித்த பள்ளி சிறுமி!…

 29 5 23

ஊரில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம், பள்ளி சிறுமி நேரில் புகார் அளித்துள்ளார்.

நாகை மாவட்டம், பெருங்கடம்பனூரில் 3 குடும்பங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தூர்வாரும் பணியை ஆய்வு செய்ய வந்த மாவட்ட ஆட்சியரிடம் சிறுமி மனு அளித்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் பெருங்கடம்பனூரில், நற்பணி கழகம் என்ற ஊர் அமைப்பில் இருந்து விலகியதால் சோமசுந்தரம் என்பவரது குடும்பம் உள்ளிட்ட 3 குடும்பங்கள் கடந்த 3 வருடங்களாக ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். உறவினர் இறப்புக்கு கூட போக முடியாமல் அந்த குடும்பத்தினர் அவதியடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் தேவநதி வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய அந்த பகுதிக்கு வந்த மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கிசை பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த பள்ளி சிறுமி சந்தித்து, சால்வை அணிவித்து தாம் கொண்டுவந்த மனுவை அளித்தார்.

தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கேட்டுக் கொண்டார். அந்த சிறுமியை நலம் விசாரித்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்


source https://news7tamil.live/displaced-families-the-school-girl-complained-to-the-district-head-in-person.html