புதன், 31 மே, 2023

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க!

 30 5 23

jobs
அரசு வேலைவாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் மாவட்ட தர ஆலோசகர் (District Quality Consultant) மற்றும் திட்டம் மற்றும் நிர்வாக உதவியாளர் (Programme cum Administrative Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 01.06.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

மாவட்ட தர ஆலோசகர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Dental/ AYUSH/ Nursing/ Social Science/ Life Science/ Master in Health Administration / Master in Public Health / Health Management / Masters in Epidemiology  படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 40,000

திட்டம் மற்றும் நிர்வாக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 12,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2023/05/2023051921.pdf அல்லது https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2023/05/2023051966-1.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி : துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், 5 ஆம் நம்பர் புதுத்தெரு நல்லத்துக்குடி மெயின்ரோடு, மயிலாடுதுறை – 609001.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 01.06.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2023/05/2023051977.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.


source https://tamil.indianexpress.com/education-jobs/mayiladuthurai-health-department-assistant-jobs-2023-apply-soon-682602/