29 5 23
ஜிஎஸ்எல்வி-எஃப்12 ராக்கெட் மூலம் வழிகாட்டுதல் பயன்பாட்டுக்கான என்விஎஸ்-01 செயற்கைக் கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இன்று காலை 10.42 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.
வளரும் நாடுகள், சிறிய செயற்கைக்கோள் உருவாக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும்
தனியார் நிறுவனங்களின் செயற்கை கோள்களை பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில்
செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் இஸ்ரோ எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்களை உருவாக்க தொடங்கியுள்ளது.
இஸ்ரோ சார்பாக இதுவரை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போன்ற ராக்கெட் மூலம் அதிக எடை கொண்ட செயற்கை கோள்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட நிலையில் எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்கள் 500 கிலோவிற்கு குறைவான செயற்கை கோள்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு ‘ஜிபிஎஸ்’ போல, இந்தியாவில் தரை, கடல், வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்கு உதவும் ‘இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக் கோள் அமைப்பு’ (ஐஆர்என்எஸ்எஸ்) உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது. இதற்காக கடந்த 2013 முதல் 2016 வரையிலான காலகட்டங்களில் ரூ. 1, 420 கோடி செலவில் ஐஆர்என்எஸ்எஸ் வகையில் 1ஏ, 1பி, 1சி, 1டி, 1இ, 1எஃப், 1ஜி என 7 வழிகாட்டுதல் செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.
இது என்.வி.எஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இது அடுத்த தலைமுறை செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 விண்கலம் மூலம் செலுத்தப்பட உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து காலை 10.42 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. என்விஎஸ்-01 செயற்கைக் கோள் 2,232 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 12 ஆண்டுகள். இதில் எல்1, எல்5 மற்றும் எஸ்-பேண்ட் டிரான்ஸ்பாண்டர் உட்பட பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த செயற்கைக் கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்12 ராக்கெட் மூலம் இன்று (மே 29) காலை 10. 41 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்த நிலையில், ராக்கெட் ஏவுதலுக்கான 27 மணி 30 நிமிட கவுன்ட்-டவுன் இன்று காலை 7. 21 மணிக்கு தொடங்குகிறது.
இந்த செயற்கை கோள் தரை, கடல், வான்வழி போக்குவரத்தை கண்காணிக்கும். பேரிடர் காலங்களில் துல்லியமான தகவல்களை தெரிவிக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
source https://news7tamil.live/countdown-start-isros-gslv-ready-to-fly-into-space-today-f-12-rocket.html