திங்கள், 22 மே, 2023

தொடரும் விபத்துகள் : மிக்-21 ரக போர் விமானங்களின் இயக்கம் தற்காலிக நிறுத்தம்..! – விமானப்படை முடிவு

 

அடிக்கடி விபத்துகள் நிகழ்வதால் மிக்-21 ரக போர் விமானங்களின் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.

ராஜஸ்தானின் சூரத்கார் பகுதியில் உள்ள விமானப் படைத் தளத்தில் இருந்து, கடந்த 8-ஆம் தேதி பயிற்சி மேற்கொண்ட மிக்-21 ரக விமானம், ஒரு வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

எனினும் விமானி பாதுகாப்பாக விமானத்தில் இருந்து வெளியேறியதால் அவர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார். அதேநேரத்தில் விமானம் விழுந்த பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது பயன்பாட்டில் உள்ள சுமார் 50 மிக்-21 ரக போர் விமானங்களின் இயக்கத்தை விமானப் படை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. இந்திய விமானப் படையில் கடந்த 1960-ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வந்த மிக்-21 ரக போர் விமானங்கள், இதுவரை சுமார் 400 விபத்துகளை சந்தித்துள்ளதால் இவற்றின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

பாதுகாப்பு பரிசோதனை முழுமையாக முடிந்த பிறகே மீண்டும் பறப்பதற்கு அனுமதிக்கப்படும் என்றும் விமானப்படை அறிவித்துள்ளது.


source https://news7tamil.live/continuing-accidents-mig-21-fighter-jets-temporarily-stopped-air-force-decision.html