வியாழன், 25 மே, 2023

எதிர்காலத்தில் எந்தப் படிப்புக்கு வேலை? தேர்வு செய்வது எப்படி? கல்வியாளர் ரமேஷ்பிரபா விளக்கம்

 தமிழகத்தில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் முன் உள்ள முக்கிய கேள்வி அடுத்து என்ன படிப்பது? எந்த படிப்புக்கு எதிர்காலத்தில் வேலை கிடைக்கும்? என்பது தான். இந்தநிலையில் எந்தப் படிப்பை தேர்ந்தெடுப்பது? எப்படி தேர்ந்தெடுப்பது என்பதை இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு படிப்புகளுக்கான விண்ணப்பச் செயல்முறை தொடங்கியுள்ளது. மாணவர்கள் மருத்துவம், பொறியியல், வேளாண்மை, வணிகவியல், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட படிப்புகளை படிக்க ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்தநிலையில், எதிர்காலத்தில் எந்த படிப்புக்கு வேலை கிடைக்கும்? சரியான படிப்பை எப்படி தேர்வு செய்வது? என்பது குறித்து கல்வியாளர் ரமேஷ்பிரபா தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், எதிர்காலத்தில் வேலை வாய்ப்புள்ள கோர்ஸ் எது என்பதுதான் முதன்மை கேள்வியாக உள்ளது. எல்லா படிப்புக்கும் வேலை வாய்ப்பு உள்ளது என்பது நிதர்சனமான உண்மை.

அண்ணா பல்கலைக்கழகத்தில் 50க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் இருந்தாலும், பொறியியல் படிக்க விரும்பும் பெரும்பாலான மாணவர்களின் தேர்வு கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி, இ.சி.இ போன்ற படிப்புகள் தான். இது இன்றைக்கு இருக்கிற வேலை வாய்ப்பு நிலைமையை வைத்து தேர்வு செய்யக் கூடியவை. ஆனால் சந்தை நிலைமை மாறக் கூடியது. ஒரு துறை மேலே போகலாம், ஒரு துறை கீழே இறங்கலாம்.

இன்றைக்கு இருக்கிற வேலை வாய்ப்பு நிலைமையை வைத்து தேர்வு செய்யும்போது, பி.எஸ்.சி படிப்புகளை முடிக்க 3 ஆண்டுகளும், பொறியியல் படிப்புகளை முடிக்க 4 ஆண்டுகளும் ஆகும். எனவே 4 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த துறையின் நிலைமை மாறலாம். துறை நிலைத்திருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. எனவே இன்றைக்கு இருக்கிற நிலைமையை வைத்து படிப்புகளை தேர்வு செய்யக் கூடாது.

இந்த பிரான்ச் எனக்கு பிடிச்சிருக்கு, உறுதியா இந்த பிரான்ச்சிற்கு எதிர்காலம் இருக்கு, நம்மால் நன்றாக படித்து, இந்தத் துறையில் வேலை வாய்ப்பை பெற முடியும் என்று நம்பிக்கை உள்ள படிப்புகளை தேர்வு செய்யுங்கள். இன்றைக்கு இருக்கிற நிலைமையை வைத்து ஒரு துறையை தேர்வு செய்யக் கூடாது.


source https://tamil.indianexpress.com/education-jobs/which-courses-have-more-jobs-opportunities-in-future-677555/

Related Posts:

  • "ஆதார் அரசியல்" இதுதான்... "மோ(ச)டி அரசியல்" "ஆதார் மிகப்பெரிய மோசடித்திட்டம்""மிகவும் ஆபத்தானது ஆதார்""நம்பகத்தன்மையற்றது""கோடிக்கணக்கில் பணவிரையம்""சிபிஐ விசாரணை… Read More
  • Hadis : ‪#‎நபி‬ (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‪#‎உண்மை‬, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும். நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு ‪#‎மன… Read More
  • நெஞ்சு எரிச்சளை தூண்டும் காரணிகள் அதிகக் கார உணவு, துரித உணவு, கொறிக்கும் உணவு போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவது; காலை உணவைத் தவிர்ப்பது, சரியான நேரத்தில் உணவைச் ச… Read More
  • *அமேசான் மழைக்காடு *அமேசான் மழைக்காடு என்பது தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள ஒரு பெரிய மழைக்காடு ஆகும். *வருடமெல்லாம் கொட்டும் மழை.சூரிய வெளிச… Read More
  • கிட்னியில் கல் கோவையில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் பொழுது இரவு 2 மணிக்கு தீராத வயிற்று வலி. கிட்னியில் கல் என்று தெரியும் இருந்தாலும் இரவு … Read More