புதன், 24 மே, 2023

விண்வெளி சென்ற முதல் அரேபிய பெண்: யார் இந்த ரய்யானா பர்னாவி

 

23 5 23

Meet Rayyanah Barnawi the first Arab woman astronaut to go to space
சவூதி அரேபிய விண்வெளி வீராங்கனை ரய்யனா பர்னாவி, கேப் கனாவரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திற்கு வந்தபோது, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை பார்த்து கை அசைத்தார்.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) ஆக்ஸியம் ஸ்பேஸின் தனிப்பட்ட பணியின் ஒரு பகுதியாக, மே 21 அன்று விண்வெளிக்குச் சென்ற முதல் அரபு பெண் விண்வெளி வீராங்கனை என்ற பெருமையை ரய்யனா பர்னாவி பெற்றார்.

சவுதி அரேபியாவைச் சேர்ந்த பர்னாவி, சக சவுதி அலி அல்-கர்னி என்ற போர் விமானியுடன் விண்வெளி நிலையத்தை அடைந்ததாக பிபிசி தெரிவித்துள்ளது.

தெற்கு மாநிலமான புளோரிடாவில் உள்ள கேப் கனாவரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட்டில் ISS க்கு பயணம் செய்த குழுவில் பர்வானி உள்ளார்.

இந்தக் குழுவில் பெக்கி விட்சன், முன்னாள் நாசா விண்வெளி வீராங்கனை, ஐ.எஸ்.எஸ்.க்கு நான்காவது விமானத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இதில், ஜான் ஷோஃப்னர், டென்னசியைச் சேர்ந்த தொழிலதிபர், பல்வேறு சோதனைகளை மேற்கொள்வதற்காக சுமார் எட்டு நாட்கள் விண்வெளி நிலையத்தில் தங்கியிருப்பார்.

ISS ஐ அடைவதற்கு முன்பு விண்வெளியில் பதிவு செய்யப்பட்ட வீடியோவில், பர்வானி, “உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு, எதிர்காலம் மிகவும் பிரகாசமாக உள்ளது. நீங்கள் பெரிய கனவு காணவும், உங்களை நம்பவும், மனித நேயத்தை நம்பவும் நான் விரும்புகிறேன்” என்றார் என பிபிசி கூறுகிறது.

யார் இந்த ரய்யானா பர்னாவி

சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் செப்டம்பர் 1988 இல் பிறந்த பர்னாவி, புற்றுநோய் ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் கிட்டத்தட்ட பத்தாண்டு கால அனுபவமுள்ள உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியாளர் ஆவார்.

ஆக்ஸியம் ஸ்பேஸின் இணையதளத்தின்படி, அவர் பயோமெடிக்கல் அறிவியலில் பல பட்டங்களைப் பெற்றுள்ளார், இதில் சவூதி அரேபியாவில் உள்ள அல்ஃபைசல் பல்கலைக்கழகத்தில் பயோமெடிக்கல் அறிவியல் முதுகலைப் பட்டம் மற்றும் நியூசிலாந்தில் உள்ள ஒடாகோ பல்கலைக்கழகத்தில் பயோமெடிக்கல் அறிவியல் இளங்கலைப் பட்டம் ஆகியவையும் அடங்கும்.

மேலும், “பர்னாவி சவுதி அரேபியாவின் ரியாத்தில் அமைந்துள்ள கிங் பைசல் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஸ்டெம் செல் மற்றும் திசு மறு பொறியியல் திட்டத்திற்கான ஆராய்ச்சி ஆய்வக தொழில்நுட்ப வல்லுநராக ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக செலவிட்டார். அவர் பல்வேறு தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சிப் பொறுப்புகளைக் கொண்டிருந்தார்.

இது தவிர, ஸ்கூபா டைவிங், ஹேங் கிளைடிங், லெட்ஜ் ஸ்விங்கிங், ஹைகிங் மற்றும் ராஃப்டிங் போன்ற சாகச விளையாட்டுகளிலும் இவர் ஆர்வம் காட்டுகிறார்.

ஆக்ஸியம் ஸ்பேஸின் தனிப்பட்ட பணி என்ன?

ஆக்சியம் மிஷன் 2 அல்லது ஆக்ஸ்-2 என அழைக்கப்படும் இது ஆக்சியம் ஸ்பேஸின் இரண்டாவது தனியார் பணியாகும்.

இது, மைக்கேல் சஃப்ரெடினியால் இணைந்து நிறுவப்பட்ட ஒரு அமெரிக்க தனியார் நிதியுதவி விண்வெளி உள்கட்டமைப்பு உற்பத்தி நிறுவனம் ஆகும்.
இவர், நாசாவின் சர்வதேச விண்வெளி நிலைய திட்ட மேலாளராக 2005 முதல் 2015 வரை பணியாற்றியவர் ஆவார்.

சமீபத்திய பணியின் ஒரு பகுதியாக, பர்னாவி மற்றும் அவரது மற்ற குழு உறுப்பினர்கள் மனித உடலியல், உயிரணு உயிரியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு போன்ற பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 20 அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சோதனைகளை நடத்துவார்கள்.

“விமானத்தில் சேகரிக்கப்பட்ட தரவு பூமி மற்றும் சுற்றுப்பாதையில் மனித உடலியல் பற்றிய புரிதலை பாதிக்கும். அத்துடன் புதுமையான தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை நிறுவுதல், எதிர்கால மனித விண்வெளிப் பயணங்களுக்கும் பூமியில் மனித இனத்திற்கும் பயன்படும்,” என ஆக்ஷன் ஸ்பேஸ் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் சவுதி விண்வெளி ஆணையத்தால் இந்த பணிக்கான பெயர் அறிவிக்கப்பட்ட பர்னாவி, ஸ்டெம் செல் மற்றும் மார்பக புற்றுநோய் ஆராய்ச்சியில் பணியாற்றியவர்.

சவுதி அரேபியா மற்றும் விண்வெளி ஆய்வு

பர்னாவி விண்வெளியை அடைந்த முதல் சவுதி பெண் என்றாலும், அங்கு செல்லும் முதல் சவுதி அவர் அல்ல. விண்வெளிக்கு வந்த முதல் சவுதி நாட்டவர் இளவரசர் சுல்தான் இபின் சல்மான் அப்துல் அஜிஸ் அல் சவுத் ஆவார்.

1985 இல் அமெரிக்கா ஏற்பாடு செய்த விண்வெளிப் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்தவர். விண்வெளி ஆய்வுத் துறையில் தனக்கென ஒரு பெயரைப் பெறும் முயற்சியில், நாடு, 2018 இல், அதன் முதல் விண்வெளி நிறுவனமான சவுதி விண்வெளி ஆணையத்தை நிறுவியது.

எவ்வாறாயினும், பர்னாவியின் விண்வெளி நிலையத்திற்கான பயணம், வானியல் மற்றும் அண்டவியலில் ஆதிக்கம் செலுத்தும் வீரராக மாறுவதற்கான சவுதி அரேபியாவின் முயற்சியின் ஒரு பகுதி மட்டுமல்ல. பெண்களை ஆண்களுக்கு நிகராக நடத்தாத ஒரு தீவிர கன்சர்வேடிவ் நாடு என்ற பிம்பத்தையும் அது அகற்ற விரும்புகிறது

source https://tamil.indianexpress.com/explained/meet-rayyanah-barnawi-the-first-arab-woman-astronaut-to-go-to-space-676942/