வியாழன், 11 மே, 2023

புதிய அமைச்சர்

 திமுக அரசு தமிழகத்தில் ஆட்சி செய்யத் தொடங்கியது முதல் இதுவரை 2 முறை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒரு அமைச்சரை நீக்குவது இதுவே முதல் முறை. ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திகுறிப்பில், தமிழக அரசு பரிந்துரைப்படி  பால் வலத்துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டு, டி.ஆர்.பி ராஜா புதிய அமைச்சராக பதவி ஏற்க உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் டி.ஆர்.பி ராஜா இன்று பதவியேற்கும் நிலையில், அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்படும் என்று கூறப்படுகிறது. தொழில் துறை அமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசுக்கு, நிதியமைச்சகம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில் நுட்பத்துறை வழங்கப்படுவதுடன், மனோ தங்கராஜுக்கு பால்வளதுறை வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

11 05 2023 

source IE Tamil 

Related Posts: