புதன், 13 டிசம்பர், 2023

தமிழ்நாடு ஜம்மு காஷ்மீரில் கூட்டாட்சி தத்துவம், ஜனநாயக மதிப்பீடுகள் என்ன ஆனது? ஆ. ராசா மக்களவையில் கேள்வி

 A Raja Lok Sabha 2

மக்களவையில் தி.மு.க எம்.பி ஆ. ராசா பேச்சு

சட்டப் பிரிவு 370-ஐ நீக்கப்பட்டபோது ஜம்மு காஷ்மீர் மக்களின் கருத்தை கேட்டிருக்க வேண்டும் என்றும் சமூகத்தின் விருப்பங்களை முறையாக அணுக வேண்டும் என்றும் தி.மு.க எம்.பி

ஆ. ராசா கூறினார்.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு (106வது திருத்தம்) சட்டத்தின் விதிகளை புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு நீட்டிப்பதற்கான 2 மசோதாக்களை மக்களவையில் டிசம்பர் 12-ம் தேதி நிறைவேற்றியது. இந்த மசோதாக்கள் மீது நடைபெற்ற விவாதத்தில், சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததில் டிசம்பர் 11 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையோட்டி பேசப்பட்டது.

இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய தி.மு.க எம்.பி ஆ. ராசா, “ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தபோது அரசியலமைப்பு அமைப்புகளால் வழங்கப்பட்ட வரலாற்றுக் கடமைகள் மற்றும் வாக்குறுதிகள் இப்போது காற்றில் பறக்கிறது” என்று கூறினார்.

மேலும்,   “இறையாண்மை பற்றி பேசப்படுகிறது, ஆனால், ஜம்மு காஷ்மீரில் கூட்டாட்சி தத்துவம், ஜனநாயக மதிப்பீடுகள் என்ன ஆனது?” என்று ஆ. ராசா மக்களவையில் கேள்வி எழுப்பினார். 

சட்டப் பிரிவு 370-ஐ நீக்கப்பட்டபோது ஜம்மு காஷ்மீர் மக்களின் கருத்தை கேட்டிருக்க வேண்டும் என்றும் சமூகத்தின் விருப்பங்களை முறையாக அணுக வேண்டும் என்றும் தி.மு.க எம்.பி ஆ. ராசா கூறினார். 

ஜம்மு காஷ்மீர் விவகாரம் பற்றி வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டி தி.மு.க எம்.பி ஆ. ராசா பேசிக்கொண்டிருந்தபோது, குறுக்கிட்ட மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றொரு உறுப்பினரைப் பேச அழைத்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. ஆ. ராசா தனது உரையை ஓரிரு நிமிடங்களில் முடித்துக்கொள்வதாகவும் பேச அனுமதி கேட்டும் சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி அளிக்கவில்லை.



source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-mp-a-raja-questions-in-lok-sabha-what-happened-to-federalism-democratic-values-in-jammu-kashmir-2021448