சாலைப் பயணங்களில் சுங்கச்சாவடிகளில் பணத்தைச் சேமிக்கவும், நெரிசல் மிகுந்த நெடுஞ்சாலைகளை தவிர்க்கவும் எளிதான வழியைத் தேடுகிறீர்களா? அப்போது உங்களுக்குத் தேவை கூகுள் மேப்ஸ் ஆப்.
சுங்கச்சாவடிகள் மற்றும் நெடுஞ்சாலைகளைத் தவிர்க்க கூகுள் மேப்ஸ்-ன் சில டிப்ஸ்களை நீங்கள் ஃபாலோ செய்யலாம். ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு இரண்டிலும் பயன்படுத்தலாம்.
1. உங்கள் start மற்றும் end பாய்ண்ட்களை என்டரி செய்யவும்.
2. இப்போது வலப் புறத்தில் உள்ள 3 புள்ளி மெனுவை கிளிக் செய்யவும்.
3. “Avoid tolls” or “Avoid motorways” ஆப்ஷனை செலக்ட் செய்யவும்.
கூகுள் மேப்ஸ் உங்களின் இந்த தேர்வுகளை Save செய்து வைத்து வருங்கால பயணங்களுக்கு உதவிடும். சுங்கச்சாவடிகளை தவிர்ப்பதன் மூலம் நீங்கள் பணத்தை சேமிக்க முடியும். குறிப்பாக தினசரி பயணம் மேற்கொள்பவர்களுக்கு உதவியாக இருக்கும். அதே போல் நெரிசலான நெடுஞ்சாலைகளையும் நீங்கள் தவிர்க்கலாம். எனினும் சுங்கச்சாவடிகள் மற்றும் நெடுஞ்சாலைகளைத் தவிர்ப்பது பயண நேரத்தை அதிகரிக்கக் கூடும். ஆனால் பலருக்கு, சில கூடுதல் நிமிட பயண நேரம் குறைந்த செலவு மற்றும் டென்ஷன்-ப்ரீ பயணமாகவும் அமையும்.
source https://tamil.indianexpress.com/technology/how-to-avoid-tolls-via-google-maps-2060216