புதன், 3 ஜனவரி, 2024

பொங்கல் பரிசுத் தொகுப்பு: தமிழக அரசு அறிவுப்பு

 பொங்கல் பரிசு தொகுப்பில் 1 கிலோ பச்சரி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக் கரும்பு வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

எல்லா வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

” 2024 தைப்பொங்கலை ஒட்டி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தாருக்கு பொங்கல் பரிசு  தொகுப்பில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக ரூ. 238 கோடியே 92 லட்சத்து 72 ஆயிரத்து 741 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்ற ஆண்டு பொங்கல் பரிசித் தொகுப்பில் ரூ.1000 வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு இடம்பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.  


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-pongali-gift-announcement-rs1000-missing-2221352

Related Posts: