வியாழன், 1 பிப்ரவரி, 2024

வந்தாச்சு குரூப் 4 தேர்வு; தமிழக அரசின் இலவச பயிற்சி வகுப்பு எங்கெல்லாம் நடக்கிறது?

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 6244 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து இந்தத் தேர்வுக்காக காத்திருந்த தேர்வர்கள் தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில், தமிழக அரசு சார்பில் குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதுதொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையானது 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக TNPSC, TNSURB, மற்றும் TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் 20000-ற்கும் மேற்பட்ட மாணவ / மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர்.

மேலும், இப்பயிற்சி வகுப்புகளின் மூலம், அதிக அளவிலான மாணவ / மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசு வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர். தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி 4 (TNPSC GROUP IV) தேர்விற்கு 6244 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு (30.01.2024) வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்டங்களில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மைய அலுவலகங்களில் சிறந்த மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் அதிக அளவிலான மாணவ / மாணவியர்கள் கலந்து கொண்டு தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலையை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இச்செய்தியினை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர் திருமதி. எ.சுந்தரவல்லி தெரிவித்தார்கள். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/education-jobs/tamil-nadu-govt-announces-free-coaching-classes-for-tnpsc-group-4-exam-2410985

Related Posts: