வியாழன், 1 பிப்ரவரி, 2024

ஐ.ஆர்.எஸ் அதிகாரி சஸ்பெண்ட்

 மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பதவி நீக்கம் செய்யக் கோரி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு ஐ.ஆர்.எஸ் அதிகாரி ஒருவர் ஜனவரி மாதம் ஆரம்பத்தில் கடிதம் எழுதியிருந்தார்.

அமலாக்க இயக்குநரகம் (இ.டி) வழக்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பதவி நீக்கம் செய்யக் கோரிய தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய வருவாய் பணி (ஐ.ஆர்.எஸ்) அதிகாரி பி. பாலமுருகன், ஓய்வு பெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு திங்கள்கிழமை மத்திய நிதியமைச்சகத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

ஐ.ஆர்.எஸ் அதிகாரி பாலமுருகன் புதன்கிழமை ஓய்வு பெறுகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை (வடக்கு) ஜி.எஸ்.டி மற்றும் சி.இ.எக்ஸ் துணை ஆணையராகப் பணியாற்றிய பாலமுருகன், கடந்த ஜனவரி மாதம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதினார். இ.டி-யை பா.ஜ.க-வின் கையாளாக மாற்றியதற்காக' மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை பதவி நீக்கம் செய்ய வேண்டும். பணமோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள 2 தலித் விவசாயிகளுக்கு ஜூலை 2023 அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பியதைக் குறித்து ஐ.அர்.எஸ் அதிகாரி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

பாலமுருகனின் மனைவி, தலித் ஜி பிரவினா, இ.டி வழக்கில் விவசாயிகளின் வழக்கறிஞராக இருந்தார். இந்த வழக்கு இப்போது முடிக்கப்பட்டுள்ளது.

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சி.பி.ஐ.சி) வெளியிட்ட ஜனவரி 29 தேதி இடைநீக்க உத்தரவில் indianexpress.com அறிந்த வரையில் பாலமுருகனை சஸ்பெண்ட் செய்ததற்கு வேறு எந்த காரணத்தையும் குறிப்பிடவில்லை.

பாலமுருகன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் சஸ்பெண்ட் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரி, உரிய அதிகாரியிடம் முன் அனுமதி பெறாமல் தலைமையகத்தை விட்டு வெளியேறக் கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை உள்ளூர் செய்தியாளர்களிடம் பேசிய பாலமுருகன், நிர்மலா சீதாராமனை நீக்கக் கோரி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியதால்தான் இடைநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறினார்.


source https://tamil.indianexpress.com/india/irs-officer-sespend-who-demand-dimissal-of-finance-minister-nirmala-sitharaman-2467126