புதன், 1 மே, 2024

விமானத் துறை வேலை வாய்ப்பு; 490 காலியிடங்கள்; இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க!

 இந்திய விமான நிலைய ஆணையத்தில் இளநிலை நிர்வாகி (Junior Executive) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 490 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 01.05.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Junior Executive 

காலியிடங்களின் எண்ணிக்கை : 490

Architecture – 3

Engineering‐ Civil – 90

Engineering‐ Electrical – 106

Electronics – 278

Information Technology – 13

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:  01.05.2024 அன்று 27 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

சம்பளம் : ரூ. .40000-3%-140000 (வருடத்திற்கு ரூ. 13 லட்சம்)

தேர்வு முறை: இந்தப் பணியிடங்களுக்கு கேட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு https://www.aai.aero/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.300 ஆக உள்ளது. SC/ST, PWD, XS, DXS பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.aai.aero/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.


source https://tamil.indianexpress.com/education-jobs/aai-recruitment-2024-for-490-junior-executive-jobs-apply-online-last-date-4526236