வியாழன், 5 செப்டம்பர், 2024

ஆந்திராவில் கனமழை:

 

ஆந்திராவில் கனமழை:


3 9 2024
andra Flood Car

கனமழை காரணமாக ஆந்திராவின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், விஜயவாடா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 300-க்கு மேற்பட்ட கார்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கடந்த சில தினங்களாக கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் என்.டி.ஆர் கிருஷ்ணா மற்றும் குண்டூர் உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகளில் வெள்ளம் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 3 தினங்களாக ஆந்திராவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக இதுவரை 4 லட்சத்திற்கு அதிகமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல கிராமபுற பகுதிகளில் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளனர். வெள்ளத்தில் மூழ்கி இதுவரை 15-க்கு மேற்பட்டோர் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சாலைகளில் தண்ணர் தேங்கியுள்ளதால், பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தண்டவாளங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில மீட்புக்குழுவினர் தொடர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முக்கிய பிரபலங்கள் பலரும் இதற்காக முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் பட தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் ஆந்திர முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ25 லட்சம் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், விஜயவாடா பகுதியில், விற்பனைக்காக வைத்திருந்த பல விலை உயர்ந்த கார்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. தற்போது வெள்ளநீர் வடித்துள்ள நிலையில், நீரில் மூழ்கிய கார்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதில் 300-க்கு மேற்பட்ட கார்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், இந்த கார்களை முழுவதுமாக மீட்க, 2-3 நாட்கள் ஆகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 


source https://tamil.indianexpress.com/india/tamil-news-about-andra-rain-flood-300-luxury-cars-damage-in-flood-6947522