வியாழன், 5 செப்டம்பர், 2024

தலித் கலைஞர்களுக்காக குரல் கொடுக்கும் ஹேமா கமிட்டி அறிக்கை

 சினிமா துறையில் பெண்களின் பிரச்னைகளை ஆய்வு செய்வதற்காக கேரள அரசால் அமைக்கப்பட்டு, கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு, நீதிபதி ஹேமா கமிட்டி 2024-ல் திருத்தப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களிடம் ஒரு புதிய ஆற்றலையும் நம்பிக்கையையும் விதைத்துள்ளது.

கொச்சியின் மரைன் டிரைவில், மலையாளத் திரையுலகின் இளம் தொழில்நுட்பக் கலைஞர், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உடனான தனது உரையாடலை யாரும் கேட்க மாட்டார்கள் என்று நம்பினார். இருந்தபோதிலும், அவர் அமைதியான குரலில் பேசுகையில், “பல தொழில்நுட்ப வல்லுநர்கள் (சினிமா துறையில்) விளிம்புநிலை சாதிகளில் இருந்து வருகிறார்கள். உண்மையில் யாரும் அதைப் பற்றி பேசுவதில்லை.” என்று கூறினார்.

சினிமா துறையில் பெண்களின் பிரச்சனைகளை ஆய்வு செய்வதற்காக கேரள அரசால் அமைக்கப்பட்டு, கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு, நீதிபதி ஹேமா கமிட்டி 2024-ல் திருத்தப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களிடம் ஒரு புதிய ஆற்றலையும் நம்பிக்கையையும் விதைத்துள்ளது.

ஆகஸ்ட் 31-ம் தேதி, இந்த தொழில்நுட்பக் கலைஞர் கொச்சியில் மற்ற பெண் சக ஊழியர்களுடன் கேரளாவின் திரைப்பட ஊழியர் சங்கத்தின் (FEFKA) கூட்டத்தில் கலந்து கொண்டார்.  “கூட்டத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பல பெண்கள் பயமின்றிப் பேசினார்கள் - ஹேமா கமிட்டி அறிக்கைக்கு நன்றி” என்று இந்த தொழில்நுட்பக் கலைஞர் கூறுகிறார்.

இது, 300 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் சாதியைப் பற்றி ஒரே ஒரு குறிப்பைக் கூறினாலும்: பெண் என்ற சொல் ஒரு ஒற்றைப் பொருள் அல்ல. இது வர்க்கம், சாதி, இனம், மதம், வயது, திறமைகள், உறவுமுறை போன்ற பல்வேறு புள்ளிகளால் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, திரையுலகில் ஒரு பிரிவினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

ஒரு திரைப்பட செட்டில் நடந்த சாதிப் பாகுபாடு குறித்த சம்பவத்தை விவரித்த அவர், “ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண் புகாரை எழுப்பியபோது, ​​“புலைச்சியை (பட்டியல் சாதி) பின்தொடர்ந்து துன்புறுத்துவது யார்?” என்று கேட்கப்பட்டது. இது சாதிப் பாகுபாடு இல்லை என்றால் என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.

மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கம் (அம்மா, இப்போது கலைக்கப்பட்டுவிட்டது) மற்றும் ஃபெஃப்கா போன்ற பெரிய சங்கங்களின் அலுவலகப் பணியாளர்கள் உட்பட மூத்தவர்கள், சாதிப் படிநிலைகள் இருப்பதைத் தொடர்ந்து மறுத்து வருவதால், தலித் பெண் தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் மௌனம் உருவாக்கப்பட்ட என்று கூறினார்.

தலித் சமூகத்தைச் சேர்ந்த பாடலாசிரியர் எஸ். மிருதுளா தேவியின் அனுபவத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் கூறும்போது, ​​“இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஃபெஃப்கா கூட்டத்தில், சினிமாவில் சாதி மற்றும் தலித் பெண்கள் எப்படி இடம் பெறவில்லை என்பதை நான் எழுப்பினேன். சினிமா துறையில் சாதி இல்லை என்று ஃபெஃப்காவில் உள்ள மூத்தவர்களால் எனக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது.

சங்கம் சாதியை அங்கீகரிக்கவில்லை என்பதால், தான் ஃபெஃப்கா உறுப்பினர் இல்லை என்று கூறி, எஸ். மிருதுளா தேவி மேலும் கூறுகிறார்,  “சினிமா துறையில் நிறைய ஜூனியர் தொழில்நுட்பக் கலைஞர்கள் விளிம்புநிலை சாதிகளை சேர்ந்தவர்கள். ஃபெஃப்கா அவர்களின் கவலைகளைத் தீர்க்க முடியாவிட்டால், நான் ஏன் அதில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்?” என்று கேட்கிறார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் பல ஃபெஃப்கா (FEFKA) உறுப்பினர்களை தொடர்புகொண்டு, சினிமா துறையில் சாதிப் பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறப்பட்டது.  “இப்போது கேள்வி பாலின பாகுபாடு மற்றும் துஷ்பிரயோகம் பற்றியது. இதில் சாதி மட்டும் இல்லை” என்கிறார் ஃபெஃப்கா நிர்வாகி ஒருவர்.

ஆகஸ்ட் 19-ல் கேரள உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட இந்த்ந அறிக்கை, சினிமா துறையில் பாலியல் உட்பட பல துன்புறுத்தல் வழக்குகளை அம்பலப்படுத்தியது. பாடலாசிரியர் எஸ். மிருதுளா தேவி கூறுகையில், ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி, திரைத்துறையை நம்பி பிழைக்கும் தலித் பெண்கள் உட்பட பலருக்கு குரல் கொடுத்துள்ளது என்ரு கூறினார்.

தலித் சமூகத்தைச் சேர்ந்த இயக்குனர் ஜீவா சாவித்திரி ஜனார்த்தனன் கூறுகையில், தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் இத்துறையில் நுழைவது மிகவும் கடினமானது.  “ஒரு இயக்குனர் உட்பட உயர்மட்ட பதவிகளில் தொழில்துறையில் நுழைவதற்கு, உங்களுக்கு நிதி ஸ்திரத்தன்மை தேவை. பல திறமையான தலித் பெண்களுக்கு நல்ல நிதி ஆதரவு இல்லாததால், அவர்கள் சினிமா துறைக்கு வருவதில்லை. பணிபுரிவபர்கள் பாகுபாட்டை எதிர்கொண்ட பிறகு தொழிலை விட்டு வெளியேறுகிறார்கள் அல்லது தங்கள் சாதியைப் பற்றி அமைதியாக இருக்க முயற்சிக்கிறார்கள்” என்று அவர் கூறுகிறார்.

ஜீவா சாவித்திரி ஜனார்த்தனன் தனது ரிக்டர் ஸ்கேல் 7.6  படத்தை இயக்கும்போது, சினிமாதுறையில் தலித் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க உதவுவதற்காக, அவர் வேண்டுமென்றே தலித் சமூகத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்களைத் தேடினார். 

மூத்த நடிகர் திலகன் தனது சாதியின் காரணமாக சினிமாவில் இருந்து சட்டவிரோதமாக தடை செய்யப்பட்டதாகக் கூறியபோது மலையாள சினிமாவில் கடைசியாக சாதிப் பாகுபாடு பரவலாக விவாதிக்கப்பட்டது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த (ஓ.பி.சி) நடிகர் திலகன் 2012-ல் காலமானார்.

அவரது மகனும், நடிகருமான ஷம்மி திலகன், தனது தந்தையை ஓரங்கட்டியதாகக் கூறப்படும் நபர்களைப் பற்றி ஒருபோதும் கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு, உடைக்க வேண்டிய அந்த பிம்பங்கள் (திரைப்பட நட்சத்திரங்கள்) உடைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

4 9 2024


source https://tamil.indianexpress.com/india/hema-committee-report-gives-voice-to-dalit-artistes-6948783