செவ்வாய், 14 ஜூலை, 2026

நீதிமன்றக் காவலில் மாற்றுத்திறனாளி இளைஞர் உயிரிழப்பு;

 

  • Jul 14, 2026 17:10 IST

    நீதிமன்றக் காவலில் மாற்றுத்திறனாளி இளைஞர் உயிரிழப்பு; முதல்வர் பதிலளிக்க வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்

    நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் காவல்துறையால் கைது செய்யப்பட்ட பின்னர் நீதிமன்றக் காவலில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டபோது நல்ல உடல்நலத்துடன் இருந்த சபரிவர்மன், விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும், மாற்றுத்திறனாளி என்பதைக் கூட பொருட்படுத்தாமல் காவல்துறையினர் தாக்கி கொலை செய்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார். மேலும், காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் இந்த சம்பவம் தொடர்பாக உரிய விளக்கம் அளித்து, உண்மை வெளிவர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.

  • 14 07 2026

  • source https://tamil.indianexpress.com/tamilnadu/politics-weather-chennai-news-live-updates-in-tamil-12161408