- Jul 14, 2026 17:56 IST
"தனிப்பட்ட புகைப்படங்களை யாருடனும் பகிர வேண்டாம்" - பெண்களுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுரை
பெண்களை ஆபாசமாக படம் மற்றும் வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் ராமகிருஷ்ணன், சமூக ஊடகங்கள் பல நன்மைகளை வழங்கினாலும், அவற்றின் மூலம் பாலியல் சுரண்டல் போன்ற குற்றங்களும் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டனர். பெண்கள் எவ்வளவு நம்பிக்கையுடன் ஒருவருடன் பழகினாலும், தங்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை யாருடனும் பகிரக்கூடாது என்றும், இந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு சமூக ஊடகங்களை பயன்படுத்தும் பெண்களுக்கு முக்கியமான பாடமாக அமைய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்ப்பு தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிடப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/politics-weather-chennai-news-live-updates-in-tamil-12161408





