வட சென்னை நேதாஜி நகரில் "மமக பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணக் குழு" தொடர்ந்து 6வது நாளாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டது.
பொது செயலாளர் தமிமுன் அன்சாரி நேரில் வந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். சுகாதாரப் பிரச்சனைகள் இப்பகுதியில் பெரும் சவாலாக இருப்பதாக மக்கள் அவரிடம் கூறினர். உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டது. மமகவினர் இப்பகுதிகளில் துப்புரவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பொதுச்செயலாளர் பாய், போர்வை, பிஸ்கெட், பால் ஆகியவற்றை வழங்கினார்.
பிறகு கொருக்குப்பேட்டைக்குச் சென்றார். அங்குள்ள மக்கள் மமகவின் பணிகளை கண்ணீர் பெருக நன்றியுடன் கூறினர். கழுத்தளவு வெள்ளம் பாய்ந்த போது, மமகவினர் மக்களை மீட்டதாகவும், தொடர்ந்து ஐந்து நாட்களாக ஆயிரக்கணக்கானோருக்கு உணவுகளை வழங்கியதாகவும் கூறினர். இன்றும் அங்கு உணவு வினியோகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து அம்மக்களுக்கு தேவையான பொருள்களின் பட்டியலை தயாரிக்குமாறு பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி மாவட்ட செயலாளர் அஸீமிடம் கூறினார்.
தொடர்ந்து வட சென்னையில் பல்வேறு பகுதிகளில் 7வது நாளாக நிவாரணப் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. 300க்கும் மேற்பட்ட மமகவினர் இப்பணிகளில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.