வெள்ளி, 11 டிசம்பர், 2015

உங்களுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன்......

Mohd M Abdahir's photo.
படம் உதவி தம்பி Tharik Ibrahim
திருப்பூர் பாஷா சலீம்'s photo.
நீங்கள் இஸ்லாமிய மக்களா??
உலக எதிர்ப்புகளை கண்டு கவலைபடாதீர்கள் !!
உங்களுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன்......
சொல்பவர் பேஸ் புக் ஓனர் - மார்க் ஜக்கர்பர்க்
உலக முஸ்லீம்களுக்கு ஆதரவாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
நம் சமூகம் மற்றும் உலகில் உள்ள முஸ்லீம்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க விரும்புகிறேன். பாரீஸ் தாக்குதல் மற்றும் இந்த வாரம் நடந்த வெறுப்பு சம்பவம் ஆகியவற்றால் பிறர் செய்த தவறுகளுக்கு தங்களுக்கு தண்டனை கிடைக்கும் என்று முஸ்லீம்கள் பயத்தில் இருப்பதை என்னால் நினைத்து பார்க்க முடிகிறது. அனைத்து சமூகத்தினருக்கும் எதிரான தாக்குதல்களை கண்டித்து குரல் கொடுக்க வேண்டும் என யூதர்களாகிய என் பெற்றோர் எனக்கு சொல்லிக் கொடுத்துள்ளனர். இன்று உங்களுக்கு எதிராக எந்த தாக்குதலும் இல்லாவிட்டாலும், சுதந்திரத்தின் மீதான தாக்குதல் அனைவரையும் காயப்படுத்தும்.
நீங்கள் இந்த சமூகத்தில் ஒரு முஸ்லீமா, நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இங்கே வரலாம், உங்களின் உரிமைக்காக போராடி, உங்களுக்கு அமைதியான, பாதுகாப்பான சூழலை உருவாக்குவோம் என்று ஃபேஸ்புக் தலைவர் என்ற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு குழந்தை பிறந்துள்ளது எங்களுக்கு நிறைய நம்பிக்கையை அளித்துள்ளது. ஆனால் சிலரின் வெறுப்பால் வெறுப்பு மனப்பான்மைக்கு பலரும் ஆளாகிவிடக்கூடும். நாம் நம்பிக்கையை இழக்கக் கூடாது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, பிறரிடம் இருக்கும் நல்லவற்றையே பார்த்தால் நாம் சிறந்த உலகை உருவாக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.