கொரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பதை பரிசோதனை மூலம் துரிதமாகக் கண்டறிய ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ என்ற கருவி இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டன.

தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் கடந்த 2 நாட்களாக கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநில அரசு ரேபிட் டெஸ்ட் கிட்டின் பரிசோதனை முடிவுகள் துல்லியமானதாக இல்லை எனக்கூறி ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனையை நிறுத்திவைத்தது.
இதனைத் தொடர்ந்து, அடுத்த 2 நாட்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதைக் கண்டறிய ரேபிட் கிட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசின் இந்திய மருத்துவ அராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
“ரேபிட் கிட் டெஸ்ட் கருவிகளின் தரத்தினை பரிசோதித்து வருகிறோம், மீண்டும் இந்தக் கருவிகளை கொண்டு சோதனையை தொடங்குவது பற்றி விரைவில் அறிவுறுத்தல் வழங்கப்படும்” என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் மாறுபட்ட முடிவுகளை காட்டுவதாக வெளியான தகவலையடுத்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.