எச்சரிக்கை....!!
அமெரிக்க தேர்தலின் அதிபர் வேட்பாளராக
குடியரசு கட்சியின் சார்பில்
போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்
முஸ்லிம்களுக்கு எதிரான
விஷக்கருத்துக்களை தொடர்ந்து பேசி
வருகிறார்.
டொனால்ட் டிரம்பிறகு எதிராக உலகம்
முழுவதும் கடும் கண்டனங்களும், அவருக்கு
வழங்கப்பட்ட டாக்டர் பட்டம் உள்ளிட்டவைகள்
திரும்பப்பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சவூதி அரேபியாவை
சேர்ந்த உலக பணக்காரர்களில் ஒருவரும்,
அமெரிக்க பொருளாதாரத்தின் மிக முக்கிய
நபருமான வலீத் பின் தலால்
செய்தியாளர்களிடம் கூறுகையில்,
டோனல்ட் டிரம்ப் அமெரிக்காவின்
அவமானமாகும். வெள்ளை மாளிகையே
கூறியது போல் அமெரிக்க அதிபர் பதவிக்கு
முற்றிலும் தகுதியற்றவர். அவரால்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒருபோதும்
வெற்றி பெற முடியாது. முஸ்லிம்கள்
விஷயத்தில் டொனால்ட் டிரம்ப் நாவடக்கத்தை
பேண வேண்டும், அவர் அடங்க மறுத்தால்
அடைக்கப்படுவார்.
இவ்வாறு வலீத் பின் தலால் கடும் எச்சரிக்கை
விடுத்துள்ளார்.
தகவல் உதவி : சவூதி
அரேபியாவிலிருந்து மௌலவி செய்யது
அலி ஃபைஜி