ஞாயிறு, 15 மே, 2016

கணக்கு சரி தான்.





இது யாருடைய பணம் ???
எங்கே இருந்து வந்தது ???
யாருக்கான பணம் ???
பாமர மக்களின் நிலையை பற்றி சிந்திக்க மறந்த கூட்டமா இந்த அரசியல் ஆட்சியாளர்களின் நிலை.
தங்க இடம் இல்லாமல் ப்ளாட் பாரத்திலும்,ஓட்டு குடிசையிலும் வாழும் அவள நிலை.
படிக்க பணமில்லாத காரணத்தினால்,படிக்கும் இளம் வயதில் பச்சிள குழந்தைகள் வேலைக்கு செல்லும் அவளநிலை.
ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் புதிதாக ஆட்சிக்கு வரும் கட்சிகள் கஜானா காலியாக உள்ளது,தமிழகம் பல கோடிகளில் கடனில் உள்ளது என்று அறிக்கை விடும் ஆட்சியாளர்களே,இப்பணம் யாருடைய பணம்,யாருக்கான பணம்.
உண்ண உணவின்றி,குடிப்பதற்கு தண்ணீர் வசதியின்றி செத்து மடியும் பல அப்பாவி பாமர மக்களின் அவளநிலை.
விவசாயத்திற்கு தண்ணீர் இன்றியும்,உரங்கள் வாங்க வழியின்றி, இவ்வுலகில் வாழ தகுதியற்றவர்கள் நாங்கள் என்று தன்னை தானே மாய்த்து கொள்ளும் அவளநிலை.
இதெற்கெல்லாம் யார் காரணம் ???
இதெற்க்கெல்லாம் எது காரணம்??
தகுந்த நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்.