வியாழன், 12 மே, 2016

டெக்ஸ்டாப்பைக் குறிவைக்கும் வாட்ஸ் ஆப்

வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிதாக இன்று டெக்ஸ்டாப் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்தபடியோ அல்லது அலுவலகத்தில் இருந்தபடியோ, எந்த நேரமும் எந்த இடத்திலும் வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியும். வாட்ஸ் அப் வெப்பை டெக்ஸ்டாப் ஆப்பின் மூலம் எளிதாக போன் மூலம் தொடர முடியும்.
இந்த புதிய டெக்ஸ்டாப் ஆப்பை விண்டோஸ் 8+ மற்றும் மேக் ஓஎஸ் 10.9+ (Mac OS 10.9+) இல் மொபைல் மூலமாக வாட்ஸ் அப்யை பயன்படுத்த முடியும். ஏனெனில் இந்த ஆப் உங்களது டெக்ஸ்டாபிலேயே இயல்பாக நோட்டிபிகேசனாக இருக்கும். நிறைய கீபோர்ட் சாட் காட் பயன்படுத்த முடியும்.
இந்த டெக்ஸ்டாப் ஆப்பை டெக்ஸ்டாப் புரவுசரில் டவுன்லோடு செய்ய வேண்டும். பின்னர் ஆப்பை ஒபன் செய்து. ஸ்கேன் செய்ய வேண்டும். பின்பு கியூ ஆர் கோடு மூலமாக மொபைலுடன் கணிணியை இணைத்து டெஸ்க்டாப் ஆப்பை பயன்படுத்லாம். இந்த ஆப்பின் மூலம் உங்கள் டெக்ஸ்டாப்பில் வாட்ஸ்அப் உரையாடல்கள், மெசேஜ் மற்றும் வீடியோக்களை பார்க்க முடியும்.