மார்புகளை அறுத்து, குடலை உருவி…
சமீப காலத்தில் நடந்த மிகக் கொடூர கொலை இதுவாகத்தான் இருக்கும். கேரளத்தில் பெரும்பாவூரைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி, தன்னுடைய வீட்டில் தனியாக இருந்தபோது பாலியன் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு மிகக் கொடூரமாக கொலை செய்யப் பட்ட செய்தி இந்தியாவை உலுக்கிக் கொண்டிருக்கிறது.
தன் தாயுடன் வசித்த எர்ணாகுளம் சட்டக் கல்லூரி மாணவி, கடந்த வியாழன் அன்று தன்னுடைய வீட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இரவு 8.30 மணிக்கு வீட்டுக்குத் திரும்பிய அவருடைய தாய், மகள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளானர். தற்சமயம் மனம்பிழந்தநிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கொலையான மாணவியின் உடலில் 30 இடங்களில் கடுமையான காயம் பட்டுள்ளது. இரு முலைகளும் அறுக்கப்பட்டுள்ளன. கூர்மையான ஆயுதங்களால் அவர் தாக்கப்பட்டிருக்கலாம் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, அவருடைய அடிவயிறு பகுதியில் கடுமையாக சிதைக்கப்பட்டு, குடலை உருவி வெளியே போட்டிருக்கின்றன. கொலையாளிகள் குறித்து எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. யாரும் கைது செய்யப்படவில்லை.