புதன், 6 ஜூலை, 2016

முந்தைய பெருநாளில் மருதானி கோனில் குழப்பம் செய்த காவிகள் இம்முறை பெருநாளையே குழப்பி விட்டனர்.

‪#‎மோடிக்காக_ஒரு_நோன்பு‬!
29 நாட்கள் அல்லாஹ்விற்காக நோன்பு வைத்த மக்கள் கடைசியாக இன்று ஒருநாள் மோடிக்காக நோன்பு வைத்துள்ளார்கள். முந்தைய பெருநாளில் மருதானி கோனில் குழப்பம் செய்த காவிகள் இம்முறை பெருநாளையே குழப்பி விட்டனர். அதனால் தான் கடந்த 4 ஆம் தேதியே பெருநாள் தேதியை நாளை (07/07/16) க்கு மாற்றியும் இன்றைக்கு கட்டாய பணி செய்ய வலியுறுத்தியும் மோடி மஸ்தானின் ஆட்கள் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்கள். இதைப் பார்த்த டவுன் காஜி நேற்று குமரியில் பிறை பார்த்த தகவலை மென்று விழுங்கி விட்டு மோடி அரசின் உத்தரவுப்படி பெருநாளை நாளைக்கு மாற்றி அமைத்துள்ளார். இந்த நிலையில் சில அறிவு ஜீவிகள் வாட்ஸ் ஆப் மூலம் ஒரு தகவலை பரப்பி வருகின்றார்கள். அதாவது கன்னியாகுமரியில் பிறை பார்த்தவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்காரர்களாம், அதனால் அவர்களின் அறிவிப்பை ஏற்றுக் கொள்ளமாட்டார்களாம் என்று எழுதியிருக்கிறார்கள். ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத்துக்காரர்கள் மட்டும் பிறை பார்க்கவில்லை, பல சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்த சகோதரர்களும் பிறையைப் பாத்திருக்கிறார்கள் என்று அவர்களுக்கு ஆதாரப்பூர்வமாக ஆடியோ பதிவுடன் பதிலடி கொடுக்க., உடனே மற்றொரு பல்டியை அடித்தார்கள் வாட்ஸ்ஆப் சுஜ அட்டைக்கத்தி போராளிகள்.
அதாவது கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறை பார்த்தது உண்மைதான்,ஆனால் குமரி மாவட்டம் கேரளா டிவிசனைச் சேர்ந்ததாம், அதனால் கேரள பிறையை ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம். ஏன்டா ஒய்யால! 2011 ஆம் ஆண்டு ஹஜ் பெருநாளைக்கு தமிழகத்தில் எங்குமே பிறை தென்படாத போது தவ்ஹீத் ஜமாஅத் பெருநாளை ஒருநாள் தள்ளி வைத்தது. ஆனால் இதே டவுன்பஸ் காஜி அன்றைக்கு தமிழக அரசின் விடுமுறை உத்தரவிற்கேற்ப பிறையே தெரியாமல் பெருநாளை அறிவித்தார். அப்போ எங்கடா பிறை பார்த்தீர்கள் என்று கேட்ட போது டெல்லியில பாத்தாகோ, மாலேகான்ல பாத்தாகோன்னு கலர்கலரா ரீல் விட்ட டவுன்பஸ் காஜி இன்னிக்கி சொல்லுது கன்யாகும்ரி மாவட்டம் கேரளாக்கே டிவிசன்கே ஆப்கே மோடி சர்கார்கே உத்ரவ்கே ஆஜ் பெர்நாள் நையே! கல் பெருநாள் ஆத்தாகே என்று சொல்லுது. அன்னைக்கு பிறையே தெரியாத மாலேகான் தமிழ்நாட்டில் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் இன்றைக்கு பிறை பார்க்கப்பட்ட தமிழ்நாட்டின் கன்னியாகுமரி கேரளாவிற்கு தள்ளப்பட்டுள்ளது. தகுதியற்றவனை டவுன் காஜியாக்கினால் அவன் மோடிக்கும் வால் பிடிப்பான் லேடிக்கும் வால் பிடிப்பான். இன்று நீங்கள் வைக்கும் நோன்பு அல்லாஹ்வுக்கு கோபத்தை தூண்டும் நோன்பு. இன்றைக்கு நீங்கள் வைக்கும் நோன்பு மோடிக்காக வைக்கும் நோன்பு. சிந்திக்க மாட்டீர்களா என் இஸ்லாமிய சகோதரர்களே! காவிச்சூழ்ச்சிக்கு பலியாகி விட்டீர்களே!

Related Posts: