செவ்வாய், 1 நவம்பர், 2016

பல பலமான சந்தேகங்களை மீடியாக்கள் தொடர்ந்து தொடுத்துக் கொண்டிருக்கின்றன;


மத்திய பிரதேசத்தின் மத்திய சிறைச்சாலையிலிருந்து தப்பிய சிமி தீவிரவாதிகள் 8 பேர் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- செய்தி.
சுட்டுக்கொள்ளப்பட்டவர்களிடம் ஆயுதங்கள் ஏதும் இல்லை.
- மத்திய பிரதேச உள்துறை அமைச்சர்.
சுட்டுக்கொள்ளப்பட்டவர்களிடம் நாட்டுத் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் இருந்தன.
- மத்திய பிரதேச போலீஸ் ஐ.ஜி.
ஆங்கில மீடியாக்களின் தொடர் கேள்விகள்.......!!!!
சிறையிலிருந்து ஏழுகிலோ மீட்டர் தூரத்திற்குள் - அதாவது சிறையிலிருந்து தப்பிய 1 மணி நேரத்திற்குள் அவர்களுக்கு ஆயுதங்கள் எப்படி வந்தது,,,?
அவர்கள் சிறையிலிருந்து தப்புவதற்கு எந்த வாகனமும் பயன்படுத்தவில்லையெனும்போது நாலாபுறமும் மலைகளால் சூழப்பட்ட இந்த இடத்திற்கு அவர்கள் வந்தது எப்படி....?
உயிரை பாதுகாத்துக்கொள்ள ஓடுபவர்கள் ஆளுக்கொருபுறம் சிதறி ஓடாமல் எல்லோரும் அந்த இடத்திலயே மொத்தமாக இருந்தனர் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதானா....?
அவர்களை பார்த்து மிகச்சரியாக போலீசிற்கு தகவல் சொன்னது யார்....?
அவர்கள் சரணடைவதாக அலறியும் அவர்களை சுட்டுக் கொன்றதாக கிராமத்து நபர் ஒருவர் எடுத்த வீடியோ பதிவில் சற்று தெளிவாகவும் தெளிவின்றியும் காணப்படுகிறதே.....அதற்க்கு போலீசின் பதிலென்ன...?
ஏற்கனவே அவர்களனைவரும் சுடப்பட்டு கிடக்கும் நிலையில் ஒருவரது உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும்பொழுது மிக நெருக்கத்தில் இருந்து அவரை போலீஸ் ஒருவர் சுட்டுக் கொள்ளும் வீடியோ பதிவு மிகததெளிவாகவே உள்ளதே.....இதற்க்கு போலீஸ் என்ன சொல்லப்போகிறது.....?
எல்லாவற்றிற்கும் மேலாக மாநிலத்திலேயே உச்சபட்ச பாதுகாப்பு மிகுந்த சிறைச்சாலையிலிருந்து அவர்கள் தப்பித்தனர் என்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தவில்லையா.....?
இப்படி பல பலமான சந்தேகங்களை மீடியாக்கள் தொடர்ந்து தொடுத்துக் கொண்டிருக்கின்றன; மாநில அதிகாரமும் போலீஸ் துறையும் முன்னுக்குப் பின் முரணாக அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கின்றது.
இந்தியனாக இந்திய நீதித்துறையின் மீது நம்பிக்கை வைத்து காத்திருப்போம். குற்றம் செய்தது யார் என்பதை அறிந்து கொள்ள கண்கொத்தி பாம்பாக கவனம் வைப்போம்.