திங்கள், 31 அக்டோபர், 2016

இந்தியாவில் முதல்முறையாக ஏ.டி.எம்.,யில் தங்கம்!


இந்தியாவில் முதன் முறையாக ஏ.டி.எம் இயந்திரம் மூலம் தங்க நாணயங்கள் பெறும் வசதி தலைநகர் டெல்லி மற்றும் பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் நகை விற்பனை செய்யும் புளூஸ்டோன் நிறுவனம் தற்போது இந்த முயற்சியில் இறங்கியுள்ளது. முதற்கட்டமாக டெல்லியில் செலக்ட் சிட்டி வாக் மால் மற்றும் பெங்களூர் ஃபோரம் மால் ஆகிய இடங்களில் தொடங்கியுள்ளது. இந்த ஏ.டி.எம் இயந்திரத்தின் மூலம் ஓன்று, இரண்டு, ஐந்து, பத்து மற்றும் 20 கிராம் வரையிலான 24 காரட் தங்க நாணயங்களை மார்கெட் விலை நிலவரத்திற்கே வாங்க முடியும். அதற்கான தொகையினை பணமாகவோ, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாகவோ செலுத்தலாம். நகையின் தரத்தை உறுதி செய்யும் ரசீதையும் இந்த இயந்திரம் வெளியிடுகிறது.

Related Posts: