புதன், 23 நவம்பர், 2016

முஹம்மது ஃபசலை கொன்றது நான்தான்: ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி வாக்குமூலம்!

கேரளாவில் கம்யூனிஸ்ட் பிரமுகர் கொலை வழக்கில் கைதான ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த சுபீஷ் எம்பரம்கண்டி என்பவர் கடந்த 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஃபசல் என்பவரையும் கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார்.
அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி நடந்த கேரள கம்மியுனிஸ்ட் கட்சி தொண்டர் கே.மோகனன் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஆர்.எஸ்.எ.ஸ் அமைப்பை சேர்ந்த சுபீஷ் எம்பரம்கண்டி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
6c1e11cb5a6bf2385850b64ed22e2a60_L
இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி கேரளாவின் National Democratic Front (NDF) அமைப்பை சேர்ந்த ஃபசல் என்பவரை தானும் தன்னுடன் சேர்ந்த பிற ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் கொலை செய்ததாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதே கும்பல் கட்ந்த 2014 இல் பவித்ரன் என்பவரையும் கொலை செய்ததாக சுபீஷ் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதற்கிடையே ஃபசல் கொலை வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. இவ்வழக்கு தொடர்பாக அப்பகுதி CPI(M) தலைவர்கள் கராயி ராஜன், கராயி சந்திரசேகரன் உட்பட 8 பேரை கைது செய்திருந்தது. சி.பி.ஐ யின் கூற்றுப்படி இந்த கொலை அரசியல் முன் விரோதம் காரணமாக நடைபெற்றுள்ளது என்றும் இந்த கொலையை ராஜன் மற்றும் சத்திரசேகரன் திட்டமிட பிறர் செய்துள்ளனர் என்றும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
In a new twist to the Fazal murder case, an RSS activist has reportedly told the police that the RSS activists were behind the murder of NDF activist.
Subeesh, who is an accused in the Mohanan murder case, said CPI-M leaders Karayi brothers – Karayi Chandrasekharan and Karayi Rajan – had no role in the crime.
Muhammad Fazal was murdered at Thalassery on October 22, 2006.

Related Posts: