சனி, 16 செப்டம்பர், 2017

பெங்களூருவில் உள்ள பேருந்து நிலையத்துக்கு தந்தை பெரியார் பெயர்! September 16, 2017

​பெங்களூருவில் உள்ள பேருந்து நிலையத்துக்கு தந்தை பெரியார் பெயர்!



பெங்களூருவில் உள்ள பேருந்து நிலையத்துக்கு பெரியாரின் பெயர் சூட்டப்படும் என கர்நாடகா உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.

பெரியாரின் பிறந்தநாள் நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் அமைச்சர் ராமலிங்க ரெட்டி இவ்வாறு தெரிவித்துள்ளார். திராவிட கலாச்சாரம் வளரவும், சமூக நீதிக்காகவும் பெரியார் பல போராட்டங்களை நடத்தியதன் விளைவாக நாம் பல்வேறு பலன்களை அனுபவித்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மூட நம்பிக்கைகளை தடுக்கும் வகையில் கர்நாடகா அரசு சட்ட மசோதா ஒன்றையும் கொண்டுவர உள்ளதாக ராமலிங்க ரெட்டி கூறினார். 

Related Posts: