ஆந்திராவில் செம்மரம் வெட்டச் சென்றதாக 23 தமிழர்களை கைது செய்துள்ள போலீசார், அரை நிர்வாணத்துடன் குறுகிய சிறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பதியில் இருந்து கடப்பா நோக்கி 3 பேருந்துகளில் சென்ற 23 தமிழர்களை கடந்த 13ம் தேதி கோடூர் போலீசார் கைது செய்தனர். தகவல் அறிந்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு அனுமதி மறுத்தனர்.
மேலும், கைது செய்யப்பட்டு 3 தினங்கள் ஆகியும், இதுவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. எந்த ஒரு குற்றவாளியையும் கைது செய்த 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய நிலையில், குற்றச்சாட்டு குறித்த ஆதாரங்கள் இல்லாததால், 23 தமிழர்களையும் அரை நிர்வாணத்தில், குறுகிய அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாகவும், பொய் வழக்கு போட முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழக அரசு உரிய நடடிக்கை எடுத்து சித்ரவதை செய்யப்படும் தமிழர்களை மீட்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.