ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

பெரியாரின் வாழ்க்கைப்பயணம் ஒரு பார்வை September 17, 2017

தந்தை பெரியாரின் வாழ்க்கைப்பயணம் ஒரு பார்வை


உலகின் மிகப்பெரும் சுய சிந்தனையாளரும், உறுதியான பகுத்தறிவுச் சிற்பியுமான தந்தை பெரியாரின் வாழ்க்கைப்பயணம் குறித்த ஒரு பார்வை..

1879 - ஈரோட்டில் ஈ.வெ.ராமசாமி பிறந்தார்.

1889 - 5ம் வகுப்புக்கு பின் படிப்பை கைவிட்டார்.

1891 - 12வது வயதில் தந்தையுடன் வணிகத்தில் ஈடுபடத் தொடங்கினார் பெரியார்.

1902 - கலப்புத் திருமணங்களை நடத்தி வைக்க ஆரம்பித்தார் பெரியார்.

1904 - துறவு பூண்டு காசிக்கு பயணம் செய்தார் பெரியார், காசியில் அவர் சந்தித்த அவமானங்கள், புரட்சி சிந்தனைகளுக்கு வித்திட்டது.

1905 - கெளரவ நீதிபதியாக இங்கிலாந்து அரசால் நியமனம் செய்யப்பட்டார் பெரியார்

1919 - காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் பெரியார்

1920 - ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார் பெரியார்

1921 - ஈரோட்டில் கள்ளுக்கடை மறியலைத் தலைமை தாங்கி நடத்தியதால் கைது செய்யப்பட்டார் பெரியார்

1922 - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரானார் பெரியார்

1924 - தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க கேரளாவில் வைக்கம் போராட்டம் நடத்தினார் பெரியார்

1925 - காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானத்தை ஏற்காததால் கட்சியிலிருந்து விலகினார் பெரியார் 

1925 -  சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார் பெரியார்

1927 - பெயருக்குப் பின்னிருந்த நாயக்கர் என்ற சாதியை நீக்கினார் பெரியார்

1930 - நன்னிலத்தில் நடந்த சுயமரியாதை மாநாட்டில், இந்தியை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றினார் பெரியார்.

1932 - ரஷ்யாவில், ஸ்டாலின் முன்னிலையில் நடந்த மே தின விழாவில் பங்கேற்றார் பெரியார் 

1938 - இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினார் பெரியார்.

1939 - நீதிக் கட்சி தலைவராக நியமனமானார் பெரியார்.

1940 - ராஜாஜி வற்புறுத்தியும் சென்னை மாகாண ஆட்சிப் பொறுப்பை ஏற்க மறுத்தார் பெரியார்.

1942 - திராவிட நாடு கொள்கையை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார் பெரியார்

1944 - சேலம் நீதிக்கட்சி மாநாட்டில், 'தென்னிந்திய நல உரிமைச் சங்கம்‘ திராவிடர் கழகமாக மாறியது

26.1.1950 - குடியரசு நாளை துக்க நாளாகக் கொண்டாடக் கோரினார் பெரியார்

1956 - இந்து கடவுள் ராமரின் உருவப்படம் எரிப்புப் போராட்டத்தையடுத்து கைது செய்யப்பட்டார் பெரியார்

19 டிசம்பர் 1973 - ‘சாதி முறையையும், இழிவுநிலையையும் ஒழித்துக்கட்டத் திராவிடர்கள் ஒன்றிணைய வேண்டும்’ இதுவே பெரியாரின் கடைசி பொதுக் கூட்டம்

24 டிசம்பர் 1973 - உடல் நலக்குறைவால் 94வது வயதில் பகுத்தறிவு பகலவன் மறைந்தார்.