முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்காக, பொதுமக்களை திரட்டி போராட திமுக தயாராக உள்ளதாக, அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் வத்தலகுண்டு சாலை அருகேயுள்ள அண்ணா திடலில், திமுக முப்பெரும் விழா பொதுக் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.
திமுகவைத்தான் தற்போது, ஆளுங்கட்சி போல் மக்கள் நினைப்பதாக கூறிய மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி தலைமையில் தற்போது நடைபெற்றுவரும் அதிமுக ஆட்சி, கலைக்கப்பட வேண்டும் என மக்கள் விரும்புவதாவும் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிடாமல், ஆளுநர் வித்யாசாகர் ராவ் வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக சாடிய மு.க.ஸ்டாலின், இந்த விவகாரத்தில் ஓரிரு நாளில் நீதிமன்றம் மூலம் நல்ல செய்தி வரும் என்றார்.