புதன், 23 நவம்பர், 2016

போலி கூகுள் இணையதளம்..எச்சரிக்கை ரிப்போர்ட்

கூகுள் இணையதளம் போன்ற போலி இணையதளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இணைய தேடுபொறி வசதியை வழங்கி வரும் முன்னணி நிறுவனமான கூகுள் பெயரில், அதேபோன்றதொரு போலி இணையதளம் இயங்குவதாக ’தி நெக்ஸ்ட் வெப்’ (The Next Web) எனும் இணையதளம் கண்டறிந்துள்ளது. கூகுள் தளத்தின் முகப்புப் பக்கத்தில் தோன்றும் Google.com என்றில்லாமல், போலி இணையதளத்தில் முதல் எழுத்தான ‘G’ என்ற எழுத்தின் அளவு சிறியதாக இருப்பதையும் தி நெக்ஸ்ட் வெப் அடையாளம் கண்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு வாக்களியுங்கள் என்ற கோரிக்கையுடன் வெளியான போலி கூகுள் இணையத்தின் முகப்புப் பக்கத்தில் தற்போது, நீங்கள் சாதித்துவிட்டீர்கள் ட்ரம்ப் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த இணையதளத்தினை பயன்படுத்துவர்களின் தகவல்கள் திருடுபோவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே கூகுள் தளத்தின் முகப்புப் பக்கத்துக்குச் செல்லும் போது அதன் முதல் எழுத்தான ‘G’-யின் அளவைக் கவனித்த பின்னர் இணைய வெளியில் உலவுங்கள்.

Related Posts:

  • MKPatti- New Road Read More
  • ATM /BANK ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படித்து விட்டு பகிரவும் இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சியபோக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வா… Read More
  • செல்போன் விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்பது விவரிக்க முடியாத புரட்சி! அறிவியலின் துணை கொண்டு கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக மனிதன் நடத்தி வரும் சாதனைகள் சாதாரணமானவையல… Read More
  • பயனுள்ள இணையத்தளங்கள்! தமிழ் நாட்டில்(இந்தியாவிலா?) சில பயனுள்ள இணையத்தளங்கள்!சான்றிதழ்கள்1) பட்டா / சிட்டா அடங்கல்http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_… Read More
  • கருத்து சுதந்திரம் காணவில்லை… காணவில்லை… விஸ்வரூபம் படத்திற்கு தடைப்போட்ட போது, கருத்து சுதந்திரம் பேசிய கருணாநிதி, பாரதி ராஜா, ஆர்கேசெல்வமணி,ராமதாஸ் உள்ளிட்ட கருத்து ச… Read More