கடந்த வியாழக்கிழமை பொது சிவில் சட்டம் குறித்த பத்திரியாளர் சந்திப்பில் முஸ்லிம் பெண்கள் இஸ்லாமிய சட்டம் குறித்தும் பொது சிவில் சட்டம் குறித்தும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் உறுப்பினரான டாக்டர் அஸ்மா செஹ்ரா, “இந்து சமூகத்தில் தன் கணவன் இறந்துவிட்டால் ஒரு பெண் விரதம் இருக்கிறார். ஆனால் இதனை ஆண்-பெண் சமத்துவம் என்று கூறி ஏன் அப்பெண் விரதம் இருக்கிறார் என்றும் மாற்றாக ஆண்கள் ஏன் இருப்பதில்லை என்றும் நாங்கள் கேட்பதில்லை. நான் அவரது வழிபாட்டு சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கிறேன். இது அவர்களை பொறுத்தவரை நம்பிக்கை சார்ந்த விஷயம். அதனை நாங்கள் மதிக்கின்றோம். அதே போன்று பிறரிடமிருந்தும் அதையே எதிர்பார்கின்றோம்.” என்று கூறியுள்ளார்.
“நாங்கள் இதற்கு மத்தச்சாயம் பூச விரும்பவில்லை. நம் நாடு பல மத வழிபாட்டுக் குழுக்களால் ஆனது. ஒவ்வொரு மதத்தை வழிபடுகிறவர்களும் தங்கள் மதத்தை தங்களது உயிரினும் மேலாக மதித்து பின்பற்றுகின்றனர். அதனை தாங்கள் மதிக்கின்றோம் என்றும் அதே போன்று தாங்களும் அதனை எதிர்பார்கின்றோம் என்றும் இதில் எந்த வித பாகுபாடும் இருக்கக் கூடாது என்றும் அவர் கூரியுள்ளார்,
சமீப காலங்களாக முஸ்லிம் தனியார் சட்டங்கள் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. முத்தலாக் விவகாரத்தை முன் வைத்து பா.ஜ.க.அரசு தனது நீண்டநாள் திட்டமான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முயன்று வருகிறது. இது குறித்து பதிலளித்த டாக்டர் அஸ்மா, இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை நாடிய முஸ்லிம் பெண்கள் ஒன்றும் அனைத்து முஸ்லிம் பெண்களின் பிரதிநிதிகள் அல்ல என்று கூறியுள்ளார். மேலும் அப்பெண்களிடம் அவர்களின் எஜமானர்கள் யார் என்று தாங்கள் கேட்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார். மேலும் அவர்களை எந்த மதரசாவில் உள்ள எந்த ஆலிம் வழிநடத்துகிறார் என்று கேள்வி எழுப்பிய அவர் இந்த ஒட்டுமொத்த பிரச்சனையே போலியானது என்று அவர் கூறியுள்ளார்.
“முத்தலாக் என்பது முஸ்லிம்களின் பிரச்சனையும் அல்ல, நம் நாட்டின் பிரச்சனையும் அல்ல. இது முஸ்லிம்களின் பெயரை கெடுத்து முஸ்லிம் பெண்களின் நிலையை பலகீனமாதாக காட்சிப்படுத்த ஏற்படுத்தப்பட்டது. இன்று இந்த ஊடகங்கள் மூலம் இந்த நாட்டிற்கு நாங்கள் ஒன்று தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம். அது முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் தனியார் சட்டத்தை பொறுத்தவரை பலகீனமானவர்கள் அல்ல. அதற்கு மாறாக பல உரிமைகளை தங்களுக்கு என்று அதில் கிடைக்கப்பெற்றவர்கள். முஸ்லிம் தனியார் சட்டம் பல உரிமைகளை தங்களுக்கு வழங்குவதோடு முஸ்லிம் பெண்களுக்கு பாதுகாப்பையும் வழங்குகிறது.” என்று கூறியுள்ளார்.
மேலும் முஸ்லிம் சமூகத்தில் தலாக்கின் விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது என்ற கருத்து தவறானது. 2011 கணக்கெடுப்பின்படி விவாகரத்து செய்யப்பட்ட, கணவரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களின் விகிதாச்சாரம் முஸ்லிம் சமூகத்தை விட பிற சமூகத்தில் அதிகம் என்று அவர் கூறியுள்ளார்.
“வரதட்சணை என்கிற பெயரால் ஒவ்வொரு வருடமும் நம் நாட்டில் 26,000 பேர் எரித்துக் கொல்லப்படுகின்றனர். இதில் 90-95% பெண்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதை நாங்கள் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது இல்லை. அது உங்களுக்கே தெரியும்.” என்றும் டாக்டர் அஸ்மா கூறியுள்ளார்.
பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசிய அவர், “நம் நாட்டில் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு கற்பழிப்பு நடைபெறுகிறது. பெண்கள் பாதுகாப்பு என்பது மிகப்பரிய பிரச்சனை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். பெண்கள் பாதுகாப்பிற்காக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியில் முடிகின்றன. இந்நிலையில் சமூகத்தின் அனைத்து பிரிவினர்களையும் தங்கள் கருத்தில் கொண்டு பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காமல் சமூகத்தின் ஒரு பிரிவை மட்டும் அரசு பெண்ண்கள் பாதுகாப்பு என்கிற போர்வையில் குறிவைத்துள்ளது. ஏன், பிற சமூகங்களில் உள்ள எவரும் இரண்டாம் திருமணம் செய்து கொள்வதில்லையா? அந்த சமூகங்களில் உள்ள பெண்கள் அனைவரும் சம உரிமை கிடைக்கப்பெற்றுவிட்டனரா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“ஆண்-பெண் சமத்துவம் மற்றும் இருபாலாருக்குமான சமநீதி குறித்து எவருக்கும் பேச வேண்டுமானால் ஒரு முழு விவாதம் நடத்த நாங்கள் தயார், முஸ்லிம் தனியார் சட்டவாரியம் முற்றிமாக இருபாலாருக்கும் சமநீதி உடையது மேலும் இங்கு ஆண் பெண் பேதத்திற்கு இடமில்லை” என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி நடைபெற்ற அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நாட்டின் அரசு மற்றும் ஊடகங்களில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இது குறித்து கருத்து கூறிய டாக்டர் அஸ்மா, “AIMPLB யின் பத்திரிகையாளர் சந்திப்பு மிகவும் ஆணித்தரமாக இருந்ததால் அதனை பலரால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இதில் ஏன் மோடி இழுக்கப்படுகிறார் என்று கூறினார். அதன் பின்னர் இரண்டு மூண்டு அமைச்சர்கள் இந்த விஷயத்தில் கருத்து தெரிவித்தனர். பின்னர் மோடியே இதில் நேரடியாக கருத்து தெரிவித்தார். தற்போது இதுகுறித்த உத்தரவுகள் ஆர்.எஸ்.எஸ். இடம் இருந்து நேரடியாக வருகின்றன. ஏன்?, எங்கள் உலமாக்களின் பத்திரிகையாளர் சந்திப்பு அவ்வளவு உறுதியானதாக இருந்ததா? அதற்கெதிராக இத்துனை பேர் வந்து கருத்துக் கூறிக்கொண்டு இருக்கிறார்கள்? தற்போது நம் எல்லைபாதுகப்பு ஒரு பிரச்சனை இல்லை போலும், பணவீக்கம் இனி பிரச்சனை இல்லை போலும், தற்போது இது தான் பிரச்சனை என்று அனைவரும் இதில் கருத்து கூறிக்கொண்டு இருக்கின்றனர்.” என்று டாக்டர் அஸ்மா கூறியுள்ளார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் காணொளியை காண: