மானியமில்லாத எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.38.50 உயர்த்தப்பட்டுள்ளது.
நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருந்துள்ளது. இதன்படி வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை, சென்னையில் இனி, ரூ.538.50-ஆக இருக்கும். வணிகரீதியாக பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.1,137-ஆக இருக்கும். பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர்களின் விலை எண்ணெய் நிறுவனங்களால் சர்வதேச சந்தை நிலவரப்படி மாதமிருமுறை மாற்றப்படுகிறது. அதன்படி, மாதத்தின் கடைசிநாளான நேற்று மானியமில்லா சிலிண்டரின் விலையை அதிகரித்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
November 01, 2016 - 07:47 AM